சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Recommended Video

    கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டார்.. பிரதமர் மோடி பதவி விளக்க வேண்டும்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    நாடு முழுக்க கொரோனா இரண்டாவது அலை மோசமாகப் பாதித்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.

    என்னாது கற்பூரத்தை நுகர்ந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா?.. பொய் நம்பாதீர்கள்! என்னாது கற்பூரத்தை நுகர்ந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா?.. பொய் நம்பாதீர்கள்!

    படுக்கை வசதி இல்லாத பிரச்சனை இருக்கிறது. இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    ஓட்டு போட்டவர்களும் குற்றவாளி

    இந்தியர்கள் செய்த மிகப்பெரிய தவறு அவரை இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததுதான். அவரை இரண்டாவது முறையாக பிரதமராக்க காரணமானவர்கள் அனைவரும் குற்றவாளிகள். இவ்வாறு சில புகைப்படங்களுடன் ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

    நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள்

    நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள்

    தற்போதைய நெருக்கடிக்கு சரியான பதில் மோடி ராஜினாமா செய்வதுதான். கொரோனா முடிந்துவிட்டதாக நம்மை நம்ப வைத்த நரேந்திர மோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வினியோகம் செய்ய ஆரம்பித்தார். ஆக்ஸிஜன், மருந்துகளை சேமித்து வைக்கவில்லை. இரண்டாவது அலைக்கு மோடி தயாராகவில்லை.

    சிறப்பாக வாழ வேண்டும்

    கோவிட், இந்திய உயிர்களை அச்சுறுத்துகிறது. சீன ஆக்கிரமிப்பு இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்துகிறது. எனவே மோடியை ராஜினாமா செய்ய இந்திய மக்கள் சொல்வதில் ஆச்சரியமில்லை. நமது நாடு இன்னும் சிறப்பான வாழ்க்கைக்கு தகுதியானது. இவ்வாறு காங்கிரஸ் டுவிட்டர் பக்கம் தெரிவிக்கிறது.

    மோடி கிண்டல்

    மேற்கு வங்க பிரச்சாரத்தில் டிடி ஓ டிடி என்று ராகம் போட்டு, மமதா பானர்ஜியை கிண்டல் செய்துள்ளார் நரேந்திர மோடி. ஆனால் கொரோனா வைரஸ், மோடியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறது என்பதால், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Resign Narendra Modi is the hashtag trending in India on Twitter over his in capable of containing coronavirus cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X