Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE: அசிங்கமாக திட்டும் அண்ணாமலை, நயினாருக்கே மரியாதையில்ல! 99% பாஜகவினர் அப்செட்: திலிப் பரபர

"ஆருத்ரா ஊழல் என்பது 10 ஆயிரம் கோடி மோடி. ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம். அந்த பணத்தை திருடியவரை எதற்காக கட்சியில் வைத்திருக்க வேண்டும்?" என திலிப் கேள்வி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிர்மல் குமாரின் ராஜினாமாவை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கூடுதல் தகவல்களை அவர் வழங்கி இருக்கிறார்.

தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த விவகாரம் அக்கட்சி மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலிலும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவிலிருந்து தற்போது விலகுவதாக அறிவித்து உள்ளார். அண்ணாமலையை விமர்சித்து பேஸ்புக்கில் அவர் எழுதிய நீண்ட பதிவை தாண்டிய பல்வேறு கருத்துக்களை அவர் நமக்கு தெரிவித்து உள்ளார்.

2 மணி நேரத்தில் நடந்தது என்ன?

2 மணி நேரத்தில் நடந்தது என்ன?

கேள்வி: நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகிய பிறகு உங்களுடைய சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. கரு.நாகராஜனின் அறிக்கையையை பகிர்ந்தீர்கள். பதவி விலகலுக்கு 3 மணி நேரம் முன்பு கூட அண்ணாமலையை பாராட்டும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்தீர்கள். இந்த 2 மணி நேரத்துக்குள் என்ன நடந்தது?

திலிப் கண்ணன்: இருக்கும் வரை கொடுத்த வேலையை சரியாக 100% செய்ய வேண்டும் என நினைத்து அதை செய்தேன்.

கேள்வி: பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தீர்கள்?

திலிப் கண்ணன்: பிப்ரவரி 10 ஆம் தேதியில் இருந்து அந்த முடிவில் இருந்தேன்

தோனி கதை சொன்ன அண்ணாமலை

தோனி கதை சொன்ன அண்ணாமலை

கேள்வி: நீங்கள் உங்கள் பதிவில் பல விசயங்களை குறிப்பிட்டு இருந்தாலும், கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று உங்களை தள்ளிய விசயம் பிப்ரவரி 10 ஆம் தேதி சமயத்தில் நடந்ததா? அது என்ன?

திலிப் கண்ணன்: மாநில நிர்வாகிகள் கூட்டம் கூட்டினார்கள். அதில் கட்சிக்கு சூப்பர் ஸ்டார் தேவையில்லை என்றார். கட்சிக்கு 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று இவரே வெளியில் கூறினார். 'உள்ளே தனியாக யாரும் வளரக்கூடாது. இஷ்டம் என்றால் இருங்க. கஷ்டம் என்றால் கிளம்புங்க' என்றார். தோனி ஒரு போட்டியில் அவருடைய 10 ஆயிரம் ரன்னுக்காக ஆடினார். அப்போது ரவி சாஸ்திரி "நீ எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எனக்கு தெரியாது. நீ 10 ஆயிரம் ரன்னுக்காக ஆடினாய். அணி வெற்றி பெற விளையாடவில்லை. நீயாக வெளியே போய்விடு. இல்லையென்றால் தூக்கிவிடுவேன் என்று சொன்னார்." என்று அண்ணாமலை ஒரு கதையை சொல்லி பழைய ஆட்கள் எல்லாம் முடிந்தால் இருங்க.. இல்லாவிட்டால் கிளம்புங்க என்பதை போல. உங்களுக்கு இதுதான் மரியாதை என்பதை மறைமுகமாக சொன்னார்.

நிர்மல் குமாரை பின்பற்றினீர்களா?

நிர்மல் குமாரை பின்பற்றினீர்களா?

கேள்வி: நிர்மல் குமார் நேற்று நமது ஒன் இந்தியா பேட்டியில் என்னை பின்பற்றும் நபர்களுக்காக இந்த கடிதம் எழுதினேன் என்று கூறினார். கட்சியில் விலகுவது அவர்களுடைய விருப்பம் என்று கூறினார். நீங்களும் அவரை பின்பற்றி விலகினீர்களா?

திலிப் கண்ணன்: நிர்மல் குமார் விலகிய பிறகு என் மீது சந்தேகப்பட்டு மாநில நிர்வாகிகள் எனக்கு போன் செய்கிறார்கள். அடுத்து என்னுடைய திட்டம் என்னவென்று கேட்கிறார்கள். யாருடைய நிர்பந்தம் என்று தெரியாது. அப்படியென்றால் என்னை நம்பவில்லை. நான் தமிழ்நாடு பாஜகவின் சமூக வலைதள பக்கங்களின் அட்மினாக இருக்கிறேன். என்னிடம் ஐடி, பாஸ்வேர்டு கேட்கிறார்கள். இத்தனை வருட எனது உழைப்பை நம்பவில்லை.

கேள்வி: நீங்கள் எத்தனை ஆண்டுகளாக பாஜக ஐடி விங்கில் உள்ளீர்கள்?

திலிப் கண்ணன்: நான் 2019ல் இருந்து இருக்கிறேன். அதற்கு முன் இளைஞரணியில் மாநில பொறுப்பில் இருந்தேன்.

சங்கிகளுக்கு அறிவுரை

சங்கிகளுக்கு அறிவுரை

கேள்வி: உங்கள் பேஸ்புக் பதிவில் சங்கிகளுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நான் விலகிய பிறகு என்னை திட்டுவீர்கள் என்று தெரியும். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு பகிருங்கள் என்று கூறினீர்கள். ஆனால், இதே விசயத்தை நீங்களும் நிர்மல் குமாருக்கும் செய்ததைபோல் உள்ளதே?

திலிப் கண்ணன்: நான் அவரை எங்குமே விமர்சிக்கவில்லை. எங்கிருந்தாலும் வாழ்த்துக்கள் என்றுதான் சொன்னேன். நான் அப்போது கட்சியில் இருந்தேன்.

 ஆருத்ரா மோசடியும் அண்ணாமலையும்

ஆருத்ரா மோசடியும் அண்ணாமலையும்

கேள்வி: ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட நபரை கட்சியில் வைத்திருப்பதாக சொன்னீர்கள். அண்ணாமலைக்கே இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்ததே? இதை அப்படி பார்க்கிறீர்கள். அது உண்மைதானா?

திலிப் கண்ணன்: அதற்குள் நான் போக விரும்பவில்லை. அயோக்கியனை எதற்கு உள்ளே வைத்திருக்க வேண்டும் என்பதே என் கேள்வி.

கேள்வி: அயோக்கியன் என்று யாரை சொல்கிறீர்கள்?

திலிப் கண்ணன்: ஊழல் செய்தவர்களை. மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை. ஆருத்ரா ஊழல் என்பது 10 ஆயிரம் கோடி மோடி. ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம். அந்த பணத்தை திருடியவரை எதற்காக கட்சியில் வைத்திருக்க வேண்டும். அவர்களை கொண்டு வந்து நான் புனிதமானவன், என் மீது சந்தேகப்படாதீர்கள். நான் பெரிய ஆள் என்று சொல்கிறார். பணம் பறிபோனதாக மக்கள் கண்ணீர் விட்டார்கள். அப்படிப்பட்ட நபரை கட்சியில் வைத்துக்கொண்டால் மக்கள் என்ன சொல்வார்கள்?

பீப் வார்த்தையால் திட்டிய அண்ணாமலை

பீப் வார்த்தையால் திட்டிய அண்ணாமலை

கேள்வி: மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்களை அழைத்து தகாத வார்த்தைகளால் அண்ணாமலை திட்டுவதாக சொல்லி இருந்தீர்கள்? யார் அந்த தலைவர்கள்? இது எப்போதும் நடப்பதா, இல்லை சமீப காலங்களில் நடக்கிறதா?

திலிப் கண்ணன்: கட்சியில் நிர்வாக மாவட்டங்கள் 66 உள்ளன. அதற்கான தலைவர்களாக இவருக்கு வேண்டப்பட்ட மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களைதான் போட்டார்கள். அவர்களுக்கு அமைப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. சீனியரை வெளியே போ என்கிறார்கள். ஒரு கூட்டத்தில் மாவட்டத் தலைவரை நோக்கி **** இதையெல்லாம் பார்க்க மாட்டியா? என்று மாநிலத் தலைவர் திட்டுகிறார். அதாவது வெளியில் ஒரு வேடம். உள்ளே வேறு வேடம்.

கேள்வி: நேற்று கேசவ விநாயகம் தலைமையில் ஐடி விங் கூட்டம் நடத்தி இருக்கிறீர்கள். நிர்மல் குமார் ராஜினாமாவுக்கு பிறகு நடந்த அந்த கூட்டத்தில் எந்த மாதிரியான விசயங்கள் பேசப்பட்டன.

திலிப் கண்ணன்: அது உள்ளே நடந்த விசயங்கள். வெளியில் வந்தாலும் அது ஒரு கட்சியின் விசயம் பேச வேண்டும். அதை சொன்னால் இன்னும் நம்மை தரம் தாழ்த்திக்கொண்டதாகிவிடும்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

கேள்வி: சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். சசிகலா புஷ்பா பற்றி நீங்கள் சொன்னதை புரிந்துகொள்ள முடிகிறது. நயினார் நாகேந்திரன் பாஜக சட்டமன்றக்குழு தலைவராக இருக்கிறார். அவரை மதிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அவருக்கு என்ன நடந்தது?

திலிப் கண்ணன்: அவரை எதாவது ஒரு குழுவுக்கு தலைவராக போட்டுள்ளார்களா? எதிலாவது முன்னிலைபடுத்தி உள்ளார்களா? பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அவர் ஒரு சீனியர் எம்.எல்.ஏ. நமது கட்சியை நம்பி வந்தவர். அவருக்கான மரியாதை இல்லை.

கேள்வி: இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் தங்களுடைய வருத்தங்களை பதிவு செய்துள்ளார்களா?

திலிப் கண்ணன்: யாரும் என்னிடம் பேசியதில்லை.

கேள்வி: நீங்கள் இதுதொடர்பாக புகார் கொடுத்து இருக்கிறீர்களா?

திலிப் கண்ணன்: என்னுடைய கருத்தை எப்படி மேலே எடுத்துக்கொள்வார்கள்.

புகார்களை தலைமை கேட்காது

புகார்களை தலைமை கேட்காது

கேள்வி: தமிழ்நாடு பாஜகவில் ஐடி விங் வலுவானதாக பார்க்கப்படுகிறது. ஜேபி நட்டாவிடம் நிர்மல் குமார் விருதெல்லாம் வாங்கினார். அதன் மாநில செயலாளராக நீங்கள் இருக்கும்போது உங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்தானே?

திலிப் கண்ணன்: அதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். மாநில தலைமையும் கேட்காது. 99% நிர்வாகிகள் மன வேதனையில் இருக்கிறார்கள்.

கேள்வி: அமர் பிரசாத் ரெட்டி பற்றி நீங்கள் பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டினீர்கள். அவர் மீது சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் வைக்கிறார்கள். என்னதான் நடக்கிறது?

திலிப் கண்ணன்: எவ்வளவோ தகவல் வருகிறது. மீடியாவில் இருக்கும் உங்களுக்கு தெரியாதா?

கேள்வி: நீங்கள் சொல்வதுதானே முறையான தகவலாக இருக்கும்.

திலிப் கண்ணன்: எவ்வளவோ பேசலாம் சார். இதுவே போதும் என்று நினைக்கிறேன்.

அடுத்து எந்த கட்சி?

அடுத்து எந்த கட்சி?

கேள்வி: நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்திருக்கிறார். நீங்கள் பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக ஏற்று செயல்பட்டவர். அடுத்து எந்த கட்சிக்கு செல்ல இருக்கிறீர்கள்.

திலிப் கண்ணன்: நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

கேள்வி: அப்படி எடுத்தால் திராவிட கட்சிகள் பக்கம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?

திலிப் கண்ணன்: இல்லை. எந்த திட்டமும் செய்யவில்லை.

கேள்வி: நீங்கள் பதவி விலகியதற்கு பிறகு தலைவர்கள் யாராவது உங்களை தொடர்புகொண்டார்களா?

திலிப் கண்ணன்: யாரும் அழைக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+