வார் ரூம் சுவர்.. ஆருத்ரா மோசடி! அண்ணாமலையை சாடி பாஜகவிலிருந்து விலகிய திலிப் அதிமுகவில் இணைந்தார்
#எடப்பாடியார்_என்னும்_ஆளுமை என்ற ஹேஷ்டேக்குடன் திலிப் கண்ணன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவருக்கு அருகே நிர்மல் குமாரும் உள்ளார்.
சென்னை: பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகிய அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து, நேற்று பாஜகவில் இருந்து விலகிய ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணனும் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிமுகவில் இணைந்தது கூட்டணிக்கு உள்ளேயே பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது
இந்த நிலையில் பாஜகவிலிருந்து நேற்று விலகுவதாக அறிவித்து இருந்த தமிழ்நாடு பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணனும் நேற்று அண்ணாமலையை விமர்சித்து பேஸ்புக்கில் நீண்ட பதிவை வெளியிட்ட நிலையில் தற்போது அதிமுகவில் இணைந்து உள்ளார்.

ட்விட்டரில் பதிவு
#எடப்பாடியார்_என்னும்_ஆளுமை என்ற ஹேஷ்டேக்குடன் அவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவருக்கு அருகே நிர்மல் குமாரும் உள்ளார். நேற்று அவர் முகநூலில் பதிவிட்டதாவது,"கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்.

ஆருத்ரா மோசடி
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்.

கே.டி.ராகவன்
தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்.
(அவர் மீது இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை) அடுத்து பேராசிரியர் சீனிவாசன். மொத்தம் நான்கு பொதுசெயலாளர்கள். அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு தன்னைவிட அறிவாளியான பேராசியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.

நயினார் நாகேந்திரன்
அடுத்து பொன்.பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர். அவருக்கு சின்ன பிரச்சினை வருது. அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்ற போது அந்தக்காவை தடுத்து பொன்.பாலகனபதியை அசிங்கப்படுத்தினார். அடுத்து நைனார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை.

அசிங்கமான வார்த்தை
மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு **** என்று போலீஸ் தோரணையில் ஏளனமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான்.

உதவாத அண்ணாமலை
பாஜக தொண்டனை கைது செய்துவிட்டார்கள்னு செய்தி அனுப்பினால் அவன் ஏன் இப்படி பதிவு போட்டான்னு திருப்பி கேள்வி கேட்கிறது. அவனுக்கு எந்த சட்ட உதவியும் செய்கிறது இல்ல. சட்ட உதவி செய்கிறவனை ஏன் செய்கிறனேனு மிரட்டல் விடுறது. இந்த சங்கிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கு. எவனையாது தூத்தனும்னா மொத்தமா தூத்துறது.

எல்.முருகன் தலைவராக இருந்த காலம்
அவன் என்ன பண்ணிட்டு வந்திருக்கான்? அவன் உழைப்பு என்ன? இப்பேர்பட்டவன் எப்படி திடீர்னு பேசுறான். இவனே இப்படி பேசுறான்ன இவன் என்ன செய்தார்கள் என்று ரெண்டு பக்கமும் யோசிக்க மாட்டானுங்க.
பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும் போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கிய தலைவர்களை எல்லாம் கொண்டு வந்து கட்சியில் இணைத்தார்.

90% நிர்வாகிகள்
அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல. நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பகளுக்கு அவர் புனிதராக தான் தெரிவார்.

சங்கிகளே
இன்னும் இந்த வார் ரூம் கோஸ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்ப போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். எப்படியும் என்ன திட்டுவிங்க. அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சி பாருங்க.

என்னை திட்டி தீர்ப்பீர்கள்
இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்க்கு 100% உழைத்திருக்கேன். என்னை எப்படியும் திட்டி தீர்ப்பீர்கள் அதற்கு முன்னால் ஒரு சித்தாந்தவாதியே இப்படி போறானே தவறு எங்கே நடக்குதுனு ஒரு முறை யோசிச்சிட்டு திட்டுங்க. இத்தனை காலம் என்னோடு பயனித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications