Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய பாஜக அரசின் வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்- அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய (வக்பு) சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம், அண்ணா திமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு, வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவைகொண்டு வருகிறது. இஸ்லாமியர்களின் சொத்துகளை நிர்வகிக்கக் கூடியதுதான் வக்ஃபு அமைப்பு. இந்த வக்ஃபு வாரியம் தொடர்பாக 1995-ம் ஆண்டு சில சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய மத்திய பாஜக அரசு, இந்த 1995-ம் ஆண்டு சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்கிறது.

Wakf Bill tamilnadu stalin

வக்ஃபு சொத்துகள்

இஸ்லாமியர்கள். அல்லாவின் பெயரில் வழங்கப்படுகிற சொத்துகளை நிர்வகிக்க கூடியது வக்ஃபு வாரியம். அதேபோல இப்படி நன்கொடையாக தரப்பட்ட சொத்துகளை வாரிசுதாரர்களும் நிர்வகித்துக் கொள்ளவும் முடியும். தற்போது வாரிசுதாரர்கள் நிர்வகிக்கக் கூடிய வக்ஃபு வாரிய சொத்துகள் தொடர்பாகவே சட்ட திருத்தம் கொண்டு வருகிறது மத்திய பாஜக அரசு.

மாவட்ட் ஆட்சியருக்கு அதிகாரம்

வக்ஃபு வாரியத்தின் சொத்து தொடர்பான சர்ச்சையில் மாவட்ட ஆட்சியர் இறுது முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை மத்திய அரசின் புதிய மசோதா வழங்குகிறது; அரசு நிலத்தை வக்ஃபு வாரியம் உரிமை கோரினால் ஆட்சியரும் அறிக்கை அனுப்பலாம்; வக்ஃபு சொத்துகள்- அரசின் சொத்துகள் என ஆட்சியர் அறிக்கை தந்தால், சட்டப்படி அரசு சொத்தாக மாற்றப்படும்.
ஒரு சொத்து வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமா என்கிற கணக்கெடுக்கிற உரிமையை இனி வக்ஃபு வாரியம் இழக்கும்; இந்த உரிமையானது புதிய மசோதா மூலம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படும்.

பிற மதத்தவருக்கும் இடம்

மத்திய வக்ஃபு கவுன்சில் என்ற அமைப்பில் பொதுவாக அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பர். ஆனால் மத்திய அரசின் புதிய மசோதாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர் 2 பேரும் உறுப்பினராக வகை செய்கிறது. அத்துடன் பெண்களும் இந்த கவுன்சிலில் உறுப்பினராக நியமிக்கப்படுவர்.
மேலும் முஸ்லிம்களில் உள்ள ஷியா, ஷன்னி என பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனி வாரியங்களும் அமைக்கப்படுமாம்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு

இத்தகைய மத்திய பாஜக அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகளின் 500க்கும் மேற்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன; ஆனால் பாஜக கூட்டணி கட்சிகளின் 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.

வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரக் கூடும் என்கிற அச்சம் தொடருகிறது. இதனால் நாடு முழுவதும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளன.

தமிழக சட்டசபையில் எதிர்ப்பு தீர்மானம்

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று மத்திய அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சிறப்புத் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் மசோதா- முதல்வர் ஸ்டாலின்

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், வக்ஃபு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் செயல். மத்திய-மாநில கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கும்; வக்ஃபு நிலங்களை வக்ஃபு வாரியம் முடிவு செய்யும் அதிகாரம் மாற்றப்படும்; முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுகிறது; முஸ்லிம்களின் சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்தலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் வக்ஃபு அமைப்பையே செயல்படவிடாமல் முடக்கிவிடும். ஆகையால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தீர்மான விவரம்

வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த தீர்மானம்:

இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும், அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.

ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தினைத் திருத்துவதற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வரைவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

பாஜக வெளிநடப்பு- அதிமுக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்

இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள், இந்த தீர்மானத்தின் மீது தங்களது கருத்துகளை முன்வைத்தனர். தமிழக அரசின் இந்த தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதிமுக, இந்த தீர்மானத்தை ஆதரித்தது. இதனையடுத்து தமிழக சட்டசபையில், மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+