நான் ஊதியம் பெற மாட்டேன்.. நிபந்தனையை கேட்டு திகைத்து போன முதல்வர்.. நிஜ ஜெயபீம் சந்துரு
சென்னை: எனக்கு ஊதியம் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலினிடம் கூறிய போது அவர் திகைத்து போனார் என நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் நீதிபதி கே சந்துரு. இவர் நீதிபதியாக இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்கபகளை தீர்த்து வைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகவும் போராடியதற்காக நீதிபதி சந்துரு கொண்டாடப்படுகிறார்.

அந்த சம்பவத்தை மையமாக கொண்டு ஜெய்பீம் படம் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுக்களைத் தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் சின்னத்துரையும் அவருடைய சகோதரியும் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். பள்ளி படிக்கும் போதோ ஜாதி எனும் விஷச்செடி மாணவர்கள் மத்தியில் வேரூன்றி இருப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட பள்ளியில் சந்துரு ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை, பள்ளி கல்லூரிகளிடையே ஜாதி வன்முறைகள் தடுப்பு தொடர்பான ஆணையங்களை தலைமை வகிப்பது குறித்து சந்துரு கூறியிருப்பதாவது: மாநில அரசால் அமைக்கப்படும் ஆணையங்களை தலைமை வகிக்க எந்த ஊதியமும் பெறுவதில்லை. எனக்கு ஓய்வூதியம் வருகிறது, அது போதும்.
ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் போதே எந்த ஊதியத்தையும் கவுரவத்தையும் பெற மாட்டேன் என நிபந்தனையுடன்தான் இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். நான் சொன்னதை கேட்டு முதல்வர் ஸ்டாலின் திகைத்து போனார். நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு ஊதிய பணிகளை பெற அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என சந்துரு தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications