உச்சநீதிமன்ற உத்தரவால்.. பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? முன்னாள் நீதிபதி விளக்கம்
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளதால் அவர் மீண்டும் திருக்கோவிலூர் எம்எல்ஏ ஆகிறாரா என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பதில் அளித்துள்ளார்.
திமுக அமைச்சராக பொன்முடி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது நீதிபதிகள் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அது போல் அவருக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
ஏற்கெனவே இவர் குற்றவாளி என தீர்ப்பு கிடைத்ததுமே பொன்முடியின் எம்எல்ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்த நிலையில் அவருடைய திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் கற்பக விநாயகம் கூறுகையில் பொன்முடி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் அவர் குற்றவாளி என சொல்லப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்கவில்லை. அவ்வாறு நிறுத்தி வைக்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே தீர்ப்பை நிறுத்தி வைத்தால்தான் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆகலாம். தண்டனையை நிறுத்தி வைத்ததால் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆக முடியாது.
ராஜீவ் காந்தி, பொன்முடி ஆகியோரின் வழக்கு நடைமுறைகள் வெவ்வேறானவை. எனவே அந்த வழக்குடன் பொன்முடி வழக்கை ஒப்பிட்டு அவர் மீண்டும் எம்எல்ஏ ஆவார் என சொல்ல முடியாது. இவ்வாறு கற்பக விநாயகம் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன: 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி பொன்முடியும் அவருடைய மனைவி விசாலாட்சியும் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்ரைய தினம் இருவரும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் அவருடைய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications