"ரிவென்ஞ் டிராவல்".. வெளியூர்களுக்கு ட்ரிப் போக திட்டமா?.. இப்போது வேண்டாம்- எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்
சென்னை: வெளியூர்களுக்கு சுற்றுலா பயணம் செல்வது இப்போது பாதுகாப்பாக இருக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா பரவலுக்கு இடையே தற்போது பயணம் மேற்கொள்வதும் அதிகரித்து உள்ளது. வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மக்கள் பயணம் மேற்கொள்வது அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக கடந்த 2 வருடமாக வீட்டிலேயே முடங்கி இருந்த பலர் பேக்-பேக்கை தூக்கிக்கொண்டு வெளியூர்களுக்கு டூர் செல்ல தொடங்கிவிட்டனர்.
இன்னொரு பக்கம் விடுமுறை நாட்களை பயன்படுத்திக்கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு, சுற்றுதலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு வருடமாக பயணம் செய்யாத நபர்கள் இப்படி மொத்தமாக பயணம் மேற்கொள்வதை 'revenge travel' என்று ஐசிஎம்ஆர் அழைக்கிறது.

ரிவென்ஞ் டிராவல்
அதாவது வீட்டிலேயே முடங்கி இருந்ததற்கு பதில் தரும் விதமாக திடீரென பலர் வெளியூர்களுக்கு பயணப்படுவது 'revenge travel' ஆகும். இரண்டு வருடமாக சேமித்து வைத்த பணத்தை வைத்து பயண திட்டங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றிக்கொள்வது ஆகும். இதனால் சமீப நாட்களில் சுற்றுலாதலங்களில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில்தான் 'revenge travel' காரணமாக கொரோனா மூன்றாம் அலை வேகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது .

கொரோனா மூன்றாம் அலை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் மற்றும் லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது. அதன்படி 'revenge travel' காரணமாக மக்கள் அதிகமாக வெளியே செல்வார்கள். இதனால் மூன்றாம் அலை தீவிரம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதனால் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாக வாய்ப்பு உள்ளது என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐசிஎம்ஆர்
ஜர்னல் ஆப் டிராவல் மெடிசன் பக்கத்தில் வெளியான இந்த ஆய்வு கட்டுரையில், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் பயணம் மேற்கொள்வதால் அந்த பகுதிகளில் திடீரென மக்கள் தொகை அதிகரிக்கும். அதாவது மக்கள் நெருக்கடி அதிகரிக்கும். இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் கொரோனா கேஸ்கள் கடந்த இரண்டாம் அலை முடிந்த பின் அதிகரித்தது.

ஆய்வு கட்டுரை
அங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின் மக்கள் பயணம் காரணமாக கேஸ்கள் அதிகரித்தது. இதை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் அலையின் போது மக்கள் தொகை குறைவாக இருந்ததால் பல சுற்றுலா தளங்களில் கேஸ்கள் குறைவாக பதிவானது. இதனால் அங்கு செரோ மதிப்பும் குறைவாக இருந்தது. அதாவது ஆண்டிபாடி பெற்ற நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆண்டிபாடி
இது போன்ற தலங்களுக்கு மக்கள் இப்போது அதிகம் செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக இங்கு வரும் நாட்களில் இங்கே திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு 47 சதவிகிதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு கணித்ததை விட 2 வாரங்களுக்கு முன்பாகவே இதனால் மூன்றாம் அலை ஏற்படும்.

103 சதவிகிதம்
சுற்றுலா தலங்களில் ரிவென்ஞ் டிராவல் காரணமாக 40 சதவிகிதம் வரை திடீரென மக்கள் தொகை அதிகரிக்கும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இது இன்னும் அதிகம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சமயங்களில் இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு 103 சதவிகிதம் வரை கூட அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, அதாவது இரண்டாம் அலையில் ஏற்பட்டதை விட இரண்டு மடங்கு கேஸ்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளியூர்
வெளியூர்களுக்கு ட்ரிப் போக நினைப்பவர்கள் தங்கள் கொரோனா டெஸ்ட் சான்றிதழ்களை, இரண்டு டோஸ் சான்றிதழ்களை எடுத்து செல்லலாம். இது ஒரு வகையில் பரவலை கட்டுப்படுத்தும். ஆனாலும் இது மொத்தமாக பரவலை கட்டுப்படுத்த வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. மூன்றாம் அலை அச்சம் காரணமாக மக்கள் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் திட்டங்கள் சில காலம் தள்ளிப்போடலாம் என்று இந்த ஆய்வு அறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications