Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 132 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு - இன்று முதல் அமல்

132 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்களின் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் இருந்து புறப்படும் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களின் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை ஒரு நாளுக்கு முன்பு அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7:05மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக காலை 8:05 மணிக்கும் புறப்பட்டு சென்னை சென்றடையும்.

சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (எண் 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4:05, 4:18, 4:30 மணிக்கு பதிலாக அதிகாலை 3:55, 4: 07, 4: 17 மணிக்கு புறப்படும்.

Revision in timings of Special Trains: 132 Time change from Today including Vaigai and Pandian

பைசாபாத்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (எண் 06794) மதுரை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1: 30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12:40 மணிக்கு புறப்படும்.

மதுரை-புனலூர் சிறப்பு ரயில் எண் 06729 மதுரையிலிருந்து இரவு 11: 30 மணிக்கு பதிலாக இரவு 11:25 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருப்பரங்குன்றம், நெல்லை, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11:42, அதிகாலை 3:10, காலை 9 மணி, 9:11, 9:22, 9:30, 9:40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, முறையே இரவு 11:38, நள்ளிரவு 2:45, காலை 8:45, 8:55, 9:05, 9:15, 9:24 மணிக்கு புறப்படும்.

மறு மார்க்கமாக புனலூர்-மதுரை சிறப்பு ரயில் (எண் 06730) திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3:45 மணிக்கு பதிலாக 3:40 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 02694 ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ரெயில் புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் புறப்படும் நேரமும், வந்து சேரும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இரவு 7.30 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்து சேரும்.

எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 02661 எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் செங்கோட்டைக்கு வந்து சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காலை 8.15 மணிக்கு வந்து சேரும். மேலும் செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

கன்னியாகுமரியில் இருந்து எழும்பூருக்கு 02634 புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக, நெல்லை ரயில் நிலையத்துக்கு இரவு 7.15 மணிக்கு வந்தடையும். பின்னர் நெல்லையில் இருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு 02633 புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இதே ரயில் நெல்லைக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து 3.50 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும்.

இதனிடையே தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை ஒரு நாளுக்கு முன்பு அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். 130க்கும் மேற்பட்ட ரயில்களின் நேர மாற்றத்தை அவசர, அவசரமாக அறிவிப்பது ஏன்? முன்கூட்டியே ரயில்களின் நேரம் மாற்றம் குறித்துஅறிவிப்பு வெளியிட்டால்தானே பயணிகள் திட்டமிட்டு பயணிக்க முடியும் என்று கூறியுள்ளனர். விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு, ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் உள்ளிட்டவை குறித்து எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரயில் முனையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் மற்றும் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் செல்போன்களுக்கு ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளோம். மேலும், நேரம் மாற்றம் குறித்து விபரங்களை ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போதிய ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+