சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேல்முறையீடு செய்ய கூடாது.. அன்புமணி கொதிப்பு.. செய்வோம்.. ராஜேந்திர பாலாஜி உறுதி.. என்ன நடக்கிறது?

சேலம் 8 வழி சாலை தீர்ப்பு காரணமாக அதிமுக - பாமக கூட்டணிக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எட்டு வழி சாலை பற்றி அண்புமனி பேட்டி- வீடியோ

    சென்னை: சேலம் 8 வழி சாலை தீர்ப்பு காரணமாக அதிமுக - பாமக கூட்டணிக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

    சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்தனர்.

    பாமக இந்த வழக்கில் மிக முக்கிய பின்புலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக தேர்தல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டுகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு

    சேலம் சாலை

    சேலம் சாலை

    இதுகுறித்து பாமக எம்.பி அன்புமணி தனது பேட்டியில், சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக பாமக கடுமையாக பணிகளை செய்து வந்தது. இதற்காக நான் ஆயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்து பேசினேன். தெருத்தெருவாக விவசாயிகளை சந்தித்து பேசினேன். இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து இருக்கிறது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    தமிழக அரசு இதில் மேலும் வழக்கு தொடுக்க கூடாது. 8 வழி சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு இதில் எந்த விதமான மேல்முறையீட்டையும் செய்ய கூடாது, என்று அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    சம்பந்தம் இல்லை

    சம்பந்தம் இல்லை

    ஆனால் இவரின் பேட்டிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேறு மாதிரி பேட்டியளித்துள்ளார். அதில், 8 வழிச்சாலை தீர்ப்பில் அரசுக்கு பின்னடைவு கிடையாது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாரும் பாதிக்காத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார், என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாமக தரப்பு

    பாமக தரப்பு

    இதனால் தற்போது அதிமுக, பாமக தரப்பிற்கு இடையே சிறிய பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நிறைய நிபந்தனைகளுடன்தான் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தது. ஏற்கனவே இரண்டு கட்சிகளுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.

    கூட்டணி பிரச்சனை

    கூட்டணி பிரச்சனை

    தற்போது அந்த கருத்து வேறுபாடுகளை மீறி கூட்டணி அமைத்து இருந்தாலும் மீண்டும் 8 வழி சாலை திட்டம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. அதை பாமக எதிர்க்கும்பட்சத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    English summary
    Rift creates between PMK and BJP after Salem 8 way project verdict comes today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X