பத்திரப்பதிவு.. பறந்த அறிவிப்பு.. 2,494 மனுக்களும் அப்படியே நிக்குதே.. தமிழக பதிவுத்துறை வைத்த கெடு
சென்னை: தகவல் ஆணையத்துக்கு பதில் அனுப்ப வேண்டும் என்ற முக்கிய உத்தரவை தமிழக பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டு, அதற்கான கெடுவையும் நிர்ணயித்திருக்கிறது.. என்ன நடந்தது?
தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது, கடந்த 2005-ம் இயற்றப்பட்ட சட்டமாகும்.. இதன்மூலம் அரசிடமோ, அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து நம்மால் தகவல்களை கேட்டுப்பெற முடியும்.

ஆனால் சில துறைகளிலிருந்து மட்டும் நம்மால் தகவல் பெற முடியாது.. குறிப்பாக ராணுவம், காவல்துறையில் சில பிரிவுகளில் எந்த தகவலையும் பெற முடியாது. அதேபோல, தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள் குறித்தும், நாம் சந்தேகங்களை கேட்க முடியாது... ஆனால் அதற்கும் மறைமுகமாக கேட்க ஒருசில வாய்ப்புள்ளது.
தகவல் ஆணையம்: அதேபோல, மக்களின் வரிப்பணம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் எங்கெல்லாம் செலவழிக்கப்படுகிறதோ அதை பற்றியெல்லாம் நாம் தாராளமாக கேள்விகளை கேட்டு தகவல்களை பெற முடியும்...
இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமே, விரிவான, வெளிப்படையான லஞ்சம் ஊழலற்ற அரசு நிர்வாகத்தினை கொண்டு வருவதுதான்.. அதனால் எந்தத் துறையை பற்றி வேண்டுமானாலும் நாம் இதில் கேள்விகளை கேட்கலாம்.
புதிய உத்தரவு: இந்நிலையில், தகவல் ஆணையம் வாயிலாக தெரிவிக்கப்பட்ட, 2,494 மனுக்களுக்கு, நவம்பர், 18க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பதிவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக, பதிவுத்துறை புலனாய்வு பிரிவுக்கான கூடுதல் ஐ.ஜி., பிறப்பித்துள்ள உத்தரவில் உள்ளதாவது:
"தகவல் ஆணைய சீராய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியதன் அடிப்படையில், 2,494 தகவல் உரிமை சட்ட மனுக்கள் குறித்த விபரங்கள் வந்துள்ளன. இந்த மனுக்களின் பிரதிகள், மண்டலம், பதிவு மாவட்டம், சார் - பதிவாளர் அலுவலகம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன. இவற்றை முழுமையாக படித்து கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமை சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, உரிய பதில்களை, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு பொது தகவல் அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.
தகவல் ஆணையம்: நவம்பர் 18க்குள் இந்த மனுக்களுக்கு பதில் அளித்து, அது குறித்த ஒப்புகையும் பெற்று, அந்த ஆதாரங்களை, மாநில தகவல் ஆணையத்தில் நேரில் அளிக்க வேண்டும். இந்த பதில்களின் ஒரு பிரதியை, பதிவு அஞ்சல் வாயிலாகவும் தகவல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications