சென்னை சென்ட்ரல் அருகே இருந்த குளம் என்னாச்சு தெரியுமா? ரிப்பன் பில்டிங் பின்னாடி பாருங்க
சென்னை: சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் பில்டிங்கிற்கு பின்னால் 1950களில் சிறிய குளம் ஒன்று இருந்தது. இப்போது அங்கு குளம் இருந்தது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா.. ஆம்.. உண்மையில் குளம் இருந்தது.. அந்த குளம் இருந்த இடத்தில் இப்போது என்ன இருக்கிறது. அந்த பகுதியில் என்னவெல்லாம் இருந்தது தெரியுமா? பலரும் அறியாத சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டின் கடைக்கோடி நகரான சென்னையை வெள்ளைக்காரர்கள் ஏன் தமிழ்நாட்டின் தலைநகராக உருவாக்கினார்கள் என்பதற்கு விடை , பலருக்கும் புரியாமலேயே இருந்திருக்கும். ஆனால் அந்த காலத்தில் தென்னிந்தியா மொத்தத்திற்கு சென்னை தான் தலைநகரமாக இருந்தது. மெட்ராஸ் அந்த காலத்தில் கூவம், அடையாறு, கொசஸ்தலை என மூன்று ஆறுகள் ஒடிக்கொண்டிருந்த இடம் ஆகும். இவை இல்லாம் பல ஏரிக்கள் சென்னையை சுற்றி இருந்தன.

சென்னையை சுற்றி எத்தனை ஏரிக்கள் இருந்தது என்று பலருக்கும் தெரியாது. ஆனால் உண்மையில் சென்னை ஒரு ஏரிக்களின் நகரம். ஒரு ஏரியும் இன்னொரு ஏரியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தன. எல்லா ஏரிக்களும் நிறைந்து கடலில் கலக்கும் வகையில் இயற்கையாகவே வடிவமைப்புடன் இருந்தன.
சென்னை தனது வளர்ச்சிக்காக முதலில் பலிகொடுத்தது ஆறுகளைத்தான் தான். அதன்பிறகு குளங்களையும்,ஏரிகளையும் காவு கொடுத்தது. கடலை ஒட்டி காப்புக்காடுகளாக இருக்க வேண்டிய பள்ளிக்கரணை ஏரி தொடங்கி அந்த பக்கம் போருர் ஏரி வரை பல ஏரிகள் இன்று அதன் அடையாளத்தையே இழந்துவிட்டன. பல்லாவரம் ஏரியை இரண்டாக வெட்டி சாலையே அமைத்தார்கள். பல ஏரிக்களை அழித்து குடியிருப்புகளை கட்டிவிட்டார்கள். சென்னையில் எங்கெல்லாம் ஏரி, குளம் இருந்தது என்பதை அறிய அந்த காலத்த மேப்பை பார்த்தாலே புரியும். அதேபோல் அந்த ஏரியாவின் பெயரை பார்த்தாலே புரிந்துவிடும்.
சரி விஷயத்திற்கு வருவோம். நாம் பார்க்க போது, சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் பில்டிங் இருக்கும் இடத்தை பற்றித்தான். அதன் பின்னால் 1950களில் சிறிய குளம் ஒன்று இருந்தது. இது தொடர்பான பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அழகான குளம் காட்சி அளிக்கிறது. அந்த குளம் இருந்த இடத்தில் தான் மூர் மார்க்கெட் இருக்கிறது. அந்த குளத்தின் பெயர் அல்லிக்குளம் ஆகும். அதனை லில்லி பாண்ட் என்று (சிறிய குளம்) அழைப்பார்கள்.
அதனால் தான் மூர்மார்க்கெட் பெயர், லில்லி பாண்ட் காம்ப்ளக்ஸ் என்று அழைக்கிறார்கள். 1985ல் மூர்மார்க்கெட் எரிந்து சாம்பலானதால், பழைய மூர் மார்க்கெட் கட்டடத்தை மீண்டும் உருவாக்கித் தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கை நிராகரித்த எம்ஜிஆர் தலைமையிலான அன்றைய அரசு, அருகிலிருந்த அல்லிக்குளத்தில் புதிய மூர் மார்க்கெட் கட்டித் தரப்படும் என்று அறிவித்தது. அந்த வியாபாரிகளுக்கு நிவாரணமாக அப்போது 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது தான் புதிய மார்க்கெட்.
அதேபோல் இப்போது நேரு ஸ்டேடியம் இருக்கிறது அல்லவா, அங்குதான் வண்டலூரில் இருக்கும் உயிரியல் பூங்கா இருந்தது. வண்டலூருக்கு முன்பு சென்ட்ரல் அருகில் தான் மிகப்பெரிய வனஉயிரியல் பூங்கா இருந்தது. 116 ஏக்கரில் அந்த பூங்கா இருந்தது. கால மாற்றத்தால் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால் வனவிலங்குகளுக்கு இடம் போதவில்லை.. ஒரு கட்டத்தில் பூங்காவை விரிவு செய்ய முடியாத காரணத்தால் 1975களில் சென்னைக்கு வெளியே வண்டலூரில் 1265ஏக்கர் ரிசர்வ் நிலத்தில் உயிரியல் பூங்கா உருவானது.. சென்னை சென்ட்ரல் அருகே பூங்கா இருந்த இடம் இன்று நேரு ஸ்டேடியம் ஆக இருக்கிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications