சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா

Google Oneindia Tamil News

சென்னை: ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார்.

Rishivandiyam DMK MLA Karthikeyan tests Corona Positive

கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருந்தது.

இதனிடையே ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வசந்தம் கார்த்திகேயன் மனைவி, மகள் உட்பட அவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

 மதுரையிலும் அதிகரிக்கும் கொரோனா- மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் உதயகுமார் விளக்கம் மதுரையிலும் அதிகரிக்கும் கொரோனா- மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் உதயகுமார் விளக்கம்

இதனால் கார்த்திகேயன் உட்பட 7 குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. வசந்தம் கார்த்திகேயனுக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீண்டு வர வேண்டும்- ஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

Rishivandiyam DMK MLA Karthikeyan tests Corona Positive

ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த வசந்தம் கார்த்திகேயன் MLA அவர்கள் Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார். முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Rishivandiyam DMK MLA - Karthikeyan has tested coronavirus positive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X