இன்னோவா காரை விடுங்க! பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களானு கேட்ட நாஞ்சில் சம்பத்! ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்
சென்னை: நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் தனது மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவீர்களா என தன்னிடம் கேட்டதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.
நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அவர் ஏற்கனவே திமுகவில் இருந்தார். பின்னர் வைகோ மதிமுக தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். பின்னர் வைகோவின் மதிமுகவில் இணைந்தார்.

அங்கும் அவருடன் கருத்து மோதல் ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை கொடுத்த ஜெயலலிதா, தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னோவா காரையும் கொடுத்தார்.
பின்னர் ஜெயலலிதா மறைந்ததும் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்தார். அவர் அமமுக தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவும் இல்லை என கூறிய அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
எனினும் அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார். திமுக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். இந்த நிலையில் திமுகவினர், தன்னை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் வசைபாடுவதாக கூறி தவெகவில் இணைந்தார்.
மேலும் திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என்றெல்லாம் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத்தை திமுகவினர் விமர்சித்தனர். அதிமுகவில் இன்னோவா காரை வாங்கிவிட்டு, திமுகவில் லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு தற்போது கட்சி மாறிவிட்டார் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆர்.ஜே. பாலாஜி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாஞ்சில் சம்பத் இன்னோவா கார் வாங்கிவிட்டார். நிறைய கட்சி மாறிவிட்டார்னு நிறைய மீம் பார்த்திருக்கிறோம். ஆனால் எல்கேஜி படத்திற்கு அவர நடிக்க கேட்கலாம்னு அவரது வீட்டிற்கு சென்றேன்.
அப்போது ஹவுசிங் போர்டுல 600 சதுர அடி வீட்டில்தான் அவர் இருந்தார். அதுதான் அவரது வீடுனு என்கிட்ட சொன்ன போதே ஆச்சரியமாக இருந்தது. நான் போய் அவர் கிட்ட என் படத்துல நடிக்கணும்னு கேட்டப்ப, "நான் நடிக்கிறேன், என் பையனுக்கு ஃபீஸ் கட்டுவீங்களா"ன்னு கேட்டார்.
இன்று அரசியலில் இருப்பவர்கள் சொந்தமாக காலேஜே கட்டி விடும் நிலையில் 40 ஆண்டுகளாக அரசியல்ல இருக்கும் ஒருத்தர் பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி" என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை ஊரை சேர்ந்தவர். இவர் நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் படித்தார். இவருக்கு மனைவி சசிகலா, குழந்தைகள் மதிவதனி, சரத் பாஸ்கரன் ஆகிய இருவர் உள்ளனர்.
கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் 'நாதியற்றவனா தமிழன்?' என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications