ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் கசிவு தொடர்பாக இயக்குநர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது. அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேபோல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலேயே இருக்க மாட்டார் என பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்ததை எடுத்து நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் 6 பேர் மீது வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் இது ஒரு எடிட்டட் வெர்ஷன் என்று தவறுதலாக புரிதல் இல்லாமல் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் இது முழுக்க எடிட்டர்ஸ் வெர்ஷனில் இருந்து தான் வெளிவந்திருக்கிறது என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமையல் என அலுவலகத்தில் அதன் தலைவர் ஆர் கே செல்வமணியும் எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபியும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜனநாயகன் வெளியே காசிந்ததில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரிலீஸ் தேதியானது ஜனவரி 9 என இருந்திருக்கக் கூடிய அந்த வேலையில் படம் தள்ளிப்போனது அப்போது படத்தின் இயக்குனர் எச் வினோத் படத்தில் ஒரு சில காட்சிகளை மெருகேற்றுவதற்காக 5 மொழிக்கான ஒலிக்கலவைக்காக படம் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பபட்ட்து.
எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை. படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர். காவல்துறை விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளப்படுத்தப்படுவார்கள்.
பெப்சி யூனியன் தலைவர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்," சினிமா டிஜிட்டலாக மாறிய பிறகு படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பது இல்லை. ஜனநாயகன் விவகாரம் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அடித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். எடிட்டர்ஸ் ஒரு வேளை தவறு செய்யக் கூடியவர்கள் என்றால், அவர்களினுடைய வாட்டர் மார்க் லோகோவை எப்படி பதிந்து வெளியிடுவார்கள். உதாரணத்திற்கு வங்கியை கொள்ளையடிக்க கூடியவன், எங்காவது அடையாள அட்டையை விட்டு செல்வானா? காவல்துறை குற்றவாளிகளை நெருங்கி விட்டனர். ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மத்திய அரசு தண்டனை விதித்திருக்கிறது. அந்த தண்டனை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கப்பெறும். அதேபோல திரைப்படத்தை இணையத்தில் கசிய விட்டவர்கள். *தவறு செய்தவர் எங்கள் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் இனி சினிமாவிலேயே இருக்கமாட்டார். அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் நிச்சயமாக அவர் எங்களது யூனியனில் இனிமேல் வேலை செய்யவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும்" இவ்வாறு செல்வமணி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications