ஆளுநர் போட்ட "நோ - பால்".. ரொம்ப சென்சிடிவ்.. இதில் கை வைத்தால் தப்பவே முடியாது! எச்சரிக்கும் புள்ளி
சென்னை: ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக போடும் பால் எல்லாம் நோ பாலாக இருக்கிறது, விக்கெட் எடுக்காமல் நோ பால் போடுகிறார், தமிழ்நாட்டு மக்களின் அரசியல் பற்றி ஆளுநர் புரிந்து கொள்ளவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் விமர்சனம் வைத்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவியின் பேச்சுக்கள், செயல்பாடுகள் எல்லாம் கடுமையான விமர்சனங்களை தமிழ்நாட்டில் சந்தித்து வருகிறது. சனாதனம் குறித்து அவர் பேசுவது, திராவிடத்திற்கு எதிராக அவர் பேசுவது என்று தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

பேட்டி
இந்த நிலையில் ஆளுநரின் இந்த பேச்சுக்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் விமர்சனம் வைத்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,தமிழ்நாடு பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக போடும் பால் எல்லாம் நோ பாலாக இருக்கிறது. விக்கெட் எடுக்காமல் நோ பால் போடுகிறார். தமிழ்நாட்டு மக்களின் அரசியல் பற்றி ஆளுநர் புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு மொழி, தமிழ்நாடு, திராவிடத்திற்கு எதிராக எல்லாம் பேச கூடாது. இது ரொம்ப சென்சிடிவ் விஷயம். இதில் தமிழ்நாட்டில் கை வைத்த யாரும் தப்பியதே இல்லை. ராஜாஜி இப்படித்தான் செய்தார். இந்தி திணிப்பு, சனாதன திணிப்பு போன்ற பணிகளை செய்தார். அவரை ஓட வைத்தது தமிழ்நாடு. நேருவையே எதிர்த்த மாநிலம்தான் தமிழ்நாடு.

ஆளுநர் ஆர். என் ரவி
ஆளுநருக்கு அந்த அளவிற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனென்றால் ஆளுநரை தமிழ்நாடு மக்கள் பெரிய ஆளாக கருதவில்லை. இவரை விட பெரிய ஆட்களை எல்லாம் மக்கள் பார்த்துவிட்டனர். ஆளுநர் பேசுவதால் பெரிதாக அரசியல் மாற்றம் வந்துவிடுமா. திமுகவிற்குத்தான் இது ஆதரவாக முடியும். ஆளுநரின் பேச்சு திமுகவிற்குத்தான் சாதகமாக இருக்கும். தமிழ்நாட்டு பெயரை ஆளுநர் எப்படி மாற்ற சொல்லலாம் என்று மக்கள் நினைப்பார்கள். இது ஆளுநருக்கும், பாஜகவிற்குத்தான் எதிராக செல்லும். இங்கே யாராவது தனி நாடு கோரிக்கை வைக்கிறார்களா? தமிழ்நாடு தனி நாடு வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களா?

அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு தானே தேர்தல் அரசியக்குக்குள் திமுக வந்தது? தேர்தல் அரசியலில் திமுக நிற்க அது தானே காரணம்? தனி தமிழகம் பேசும் நாம் தமிழர் கட்சி கூட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டுதானே தேர்தலில் நிற்கிறார்கள். மகாராஷ்டிராவில் இருக்கும் ராஷ்டிரா என்பது நாடு தானே? அதை மாற்ற சொல்ல முடியுமா? மஹாராஷ்டிரா பற்றி எரியாதா? அங்கே போய் சொல்லி பாருங்களேன்? இந்தியா என்பது பல மொழி கொண்ட மாகாணங்களை இணைத்து உருவாக்கிய நாடு?

தமிழ்நாடு
தமிழ்நாடு என்று சொன்னால் அது தனி நாடாக மாறிவிடுமா? இவ்வளவு வலிமையற்று இவர்கள் இருப்பார்களா? இவர்களின் கருத்துக்கள் இவ்வளவு வலிமை இன்றி இருக்குமா? இந்தியா கலந்து கொண்ட போர்களில் எல்லாம் இந்தியாவிற்கு அதிக நிதி கொடுத்தது தமிழ்நாடுதான்.. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் தவறாக பேசி ஆளுநர்தான் பிரிவினையை தூண்டுகிறார். ஆளுநர் ரவிதான் உணர்வுகளை தூண்டி, பிரிவினையை ஏற்படுத்துகிறார். அவர் இப்படி பேசுவதால் மக்களுக்கு என்ன பயன்? எந்த அளவிற்கு மக்கள் மீது கோபமும், தமிழ்நாடு மீது வன்மமும் இருந்தால் இதன் பெயரை மாற்ற வேண்டும் என்று அவர் சொல்வார்.

வெட்கம்
இது வெட்கக்கேடான விஷயம். இதில் கேவலம்.. அதிமுக இதை இன்னும் எதிர்க்கவில்லை. அண்ணா பெயரை கொண்ட அதிமுக இன்னும் இதை எதிர்க்காமல் இருக்கிறார். எடப்பாடி தலைகுனிந்து நிற்க வேண்டாமா? கூனிக்குறுகி அவர் நிற்க வேண்டும். மாநிலங்களை எல்லாமே கவுன்சிலர் அலுவலகம் போல மாற்ற பார்க்கிறார்களா? அவர்களின் எதிர்கால பிளான் இதுதான். மாநிலங்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். ஆர்.எஸ். எஸ் அமைப்பின் திட்டம் இதுதான். அந்த அஜெண்டாவில்தான் இவர் பேசிக்கொண்டு இருக்கிறாரா? என்று பத்திரிகையாளர் கார்த்திகேயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பொங்கல்
இந்த பேட்டிக்கு இடையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 12ம் தேதி மாலை இந்த பொங்கல் விழா நடக்கிறது. இந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் சார்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சட்டசபையில் உள்ள கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. தமிழ்நாடு- தமிழக வார்த்தை பிரயோகம் சர்ச்சை ஆன நிலையில், ஆளுநர் தற்போது அனுப்பி இருக்கும் இந்த கடிதமும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு இலட்சினையும் இதில் நீக்கப்பட்டு உள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications