Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண வீடுகளில் வயிறார சாப்பிட்டுவிட்டு புருஷோத்தமன் பார்த்த வேலை.. ஆடிப்போன சென்னை.. திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திருமண வீடுகளுக்கு மணப்பெண் அல்லது மணமகன் உறவினர் போல சென்று வயிறார சாப்பிட்டு விட்டு நகை பணத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்த புருஷோத்தமன் என்பவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் அண்மைக்காலமாக திருமண மண்டபங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமண வீட்டில் உறவினர்கள் அளிக்கும் மொய் பணம் மற்றும் பரிசு பொருட்களை டார்கெட் செய்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

chennai theft crime

திருமண வீட்டினர் உறவினரை கவனிக்க செல்லும் போதோ, போட்டோ எடுக்க சென்று விட்டு திரும்பி வந்தாலோ, மொய் பணம் கிபட்கள் மாயமாவதாக புகார்கள் வந்ததால் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினார்கள். வடபழனி பகுதியில் மட்டும் 5 திருமண மண்டபங்களில் லட்சக்கணக்கில் மொய் பணமும், வெள்ளி பரிசு பொருட்களும் திருடு போயிருந்தது.

அதேபோல, மயிலாப்பூரில் கடந்த மாதம் 26-ந் தேதி அன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ரூ.2 லட்சம் மொய் பணம் திருடு போயிருந்தது. இந்த நிலையில்தான் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஈஸ்வரி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், மணப்பெண் மற்றும் மணமகள் வீட்டினர் புகைப்படம் எடுக்க சென்று இருந்ததாகவும், திரும்பி வந்து பார்க்கும் போது மொய் பணம் அடங்கிய பை இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் கல்யாண மண்டபத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 60 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி ஒருவர், மொய் பணத்தை கொள்ளையடித்து சென்றதை கண்டுபிடித்தனர். இதே நபர் மேலும் ஐந்து திருமண மண்டபங்களில் கொள்ளையடித்ததையும் கண்டறிந்தனர்.

அதேபோல, மற்றொரு கல்யாண மண்டபத்தில் முன் வரிசையில் நெருங்கிய உறவினர் போல அமர்ந்து இருந்த போது அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், தொடர்ந்து திருமண மண்டபங்களை குறிவைத்து சாப்பிட்டுவிட்டு, மொய் பணத்தை திருடி வந்தது விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 53) என்பது தெரியவந்தது.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். மகன் மென்பொறியாளராக உள்ளார். புருஷோத்தமன் செயல்பாடு பிடிக்காமல் மகன் கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய இவர் சென்னை வந்திருக்கிறார். சென்னை வந்த இவருக்கு என்ன வேலை செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒரு நாள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்ததால், திருமண மண்டபத்தில் போய் சாப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த மொய்க்கவர்களை திருட ஆரம்பித்த அவர் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். திருமண வீட்டிற்கு பந்தாவாக பெண் அல்லது மாப்பிள்ளை வீட்டு உறவினர் போல செல்லும் அந்த நபர் முதலில் வயிறு முட்ட சப்பிட்டு விட்டு அதன்பிறகு திருடுவேன் என போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். புருஷோத்தமனிடம் இருந்து ரூ.2.50 லட்சம் ரொக்க பணம், ஏராளமான வெள்ளி பொருட்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+