Robo Shankar : அன்று நா முத்துக்குமார்.. இன்று ரோபோ சங்கர்.. மஞ்சள் காமாலை வந்தால் ஏன் பிழைப்பது கடினமாகிறது
சென்னை: அன்று புகழ் பெற்ற கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இன்று அதேபோல் தான் நடிகர் ரோபோ சங்கரும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இருவருமே உயிருடன் இல்லை.. மஞ்சள் காமாலை வந்தால் ஏன் பிழைப்பது கடினமாகிறது.. மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன.. மஞ்சள் காமாலைக்கும் மதுப்பழக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்புகள் என்ன என்பதை இந்த பதிவில் நாம் சற்று விரிவாக பார்ப்போம்
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மிமிக்ரி கலைஞராக ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவர்களில் ரோபோ சங்கரும் ஒருவரும். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர், பின்னாளில் 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். 'வேலையின்னு வந்த வெள்ளைக்காரன்', 'மாரி', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

ரோபோ சங்கர் உடல் நிலை
ரோபோ சங்கர் மிகவும் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். உடலை பராமரிப்பதில் அக்கறையுடன் இருப்பார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை மூலம் மீண்டு வந்த அவர் படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் அப்போதே அவர் உடல் மெலிந்து ஆளே ஒரு மாதிரியாகி இருந்தார். அவரது உடல் நிலையை கண்டு ரசிகர்கள் கவலை அடைந்தனர். எனினும் ரோபோ சங்கர் படிப்படியாக மீண்டு படத்தில் நடத்து வந்தார்.
வெறும் 46 வயது தான்
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். வெறும் வயது 46 வயதில் ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார்.
நா முத்துக்குமார்
முன்னதாக இதேபோல் தான் புகழ் பெற்ற கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான நா முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நா முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அப்போது அவருக்கு வயது வெறும் 41 தான்.
மருத்துவர்கள் விளக்கம்
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். மஞ்சள் காமாலை யாருக்கு அதிகம் வருகிறது. மஞ்சள் காமாலைக்கும் மது அருந்தும் பழக்கத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.. அப்படி என்ன தொடர்பு உள்ளது மஞ்சள் காமாலை ஏற்பட்டால் ஏன் பிழைப்பது கடினம் என்பதற்கான காரணங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.
மஞ்சள் காமாலைக்கு குடிபழக்கம் ஏன் முக்கிய காரணம்?
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல என்றும் அது ஒரு அறிகுறி என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) என்ற மஞ்சள் நிறப் பொருள் அதிகமாகும்போது இந்த அறிகுறி ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். கல்லீரல் இந்தப் பிலிருபினை உடலிலிருந்து வெளியேற்றும் பணியைச் செய்து வருகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மதுபானம் என்பது கல்லீரலுக்கு ஒரு நச்சுப்பொருளாகும். அளவுக்கு அதிகமாகவும், தொடர்ந்து மது அருந்தும் போது, கல்லீரலால் இந்த நச்சுப்பொருட்களை முழுமையாக வெளியேற்ற முடியாமல் போகிறது. இது கல்லீரல் செல்களைப் பாதிக்கிறது.
கல்லீரல் வீக்கம் (Alcoholic Hepatitis)
பொதுவாக அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கம், கல்லீரல் பிலிருபினை சரியாக வெளியேற்றுவதைத் தடுக்கும். இதனால், பிலிருபின் ரத்தத்தில் தேங்கி, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Cirrhosis)
ஒருவர் நீண்டகாலமாக மது அருந்தும்போது, கல்லீரல் செல்கள் படிப்படியாக இறந்து, அதன் இடத்தில் தழும்புகள் உருவாகிவிடுகிறது. இந்த நிலை, சிரோசிஸ் என்று மருத்துவதுறையால் அழைக்கப்படுகிறது. சிரோசிஸ் ஏற்பட்டால் கல்லீரலின் செயல்பாடு பெரிதும் குறைந்துவிடும். இதனால், பிலிருபினை வெளியேற்றும் திறன் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது, இதனால் கடுமையான மஞ்சள் காமாலை உண்டாகும். இந்தக் காரணங்களால், குடிபழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மஞ்சள் காமாலை வருவது பொதுவான ஒன்றாக மாறிவிடுகிறது
மஞ்சள் காமாலை வந்தால் ஏன் பிழைப்பது கடினம்?
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே என்று கூறும் மருத்துவர்கள், அது எந்த நோயின் அறிகுறி என்பதைப் பொறுத்து, அதன் தீவிரத்தன்மை மாறும் என்கிறார்கள், மஞ்சள் காமாலை வந்தால் பிழைப்பது கடினம் என சொல்லப்படுவதற்கு சில முக்கியமான காரணங்கள் மூன்று தான்.. ஒன்று கல்லீரல் செயலிழப்பு, இரண்டாவது உறுப்பு செயலிழப்பு, மூன்றுவாது அடைப்பு மஞ்சள் காமாலை. இதில் பெரும்பாலும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது.. அப்படியே உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது.
கல்லீரல் செயலிழப்பு
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருந்தால், நிலைமை மிகவும் ஆபத்தாக மாறிவிடும். க உடலில் உள்ள நச்சுப்பொருட்களை கல்லீரல் தான் வெளியேற்றுகிறது. மேலும் செரிமானத்திற்குத் தேவையான பித்தநீரை உற்பத்தி செய்வதும் கல்லீரல் தான். எனவே கல்லீரல் செயலிழந்தால், இந்த அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்தும் உடனே நின்றுவிடும். இதனால், உடலில் நச்சுக்கள் அதிகரித்து, பல்வேறு உறுப்புகள் செயலிழந்துவிடும்.
உறுப்பு செயலிழப்பு
கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்போது, அது மற்ற உறுப்புகளையும் பாதித்துவிடுகிறது. ரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாகும்போது, அது மூளையைப் பாதித்து கல்லீரல் என்செபலோபதி என்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், குழப்பம், நினைவு இழப்பு, கோமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அத்துடன் கல்லீரல் செயலிழப்பினால் சிறுநீரகங்கள் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, அவற்றை செயலிழக்கச் செய்துவிடுகிறது. இந்த சிக்கல்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அடைப்பு மஞ்சள் காமாலை
அதேநேரம் சில சமயங்களில், பித்தநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இந்த அடைப்பு, பித்தப்பைக் கற்கள் அல்லது கணையப் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களால் தான் இப்படி ஏற்படும். இவை புற்றுநோய்கள் கண்டறியப்படும்போது, அவை பெரும்பாலும் கடைசி நிலையில் இருக்கும். இதனால், சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலாக மாறிவிடுகிறது.
வைரஸ் தொற்று என்றால் காப்பாற்றலாம்
எனினும், மஞ்சள் காமாலை தீவிரமான கல்லீரல் நோய் அல்லது புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோயின் அறிகுறியாக இருந்தால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் ஆகும். அதேநேரம், வைரஸ் தொற்று போன்ற சில காரணங்களால் ஏற்படும் மஞ்சள் காமாலை சரியான நேரத்தில் சிகிச்சையளித்தால் குணப்படுத்தவும் முடியும்.அதாவது குடித்துவிட்டு கல்லீரலை செயல் இழக்க வைத்தால் பிழைக்க வைப்பது கடினம். அதேநேரம் வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டதாக இருந்தால் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிழைக்கவே முடியாதா
அதேநேரம் தமிழகத்தில் உள்ள சில புகழ்பெற்ற நடிகர்கள் குடித்து கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்ட நிலையில் வெற்றிகரமாக மீண்டுள்ளார்கள். எனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்க முடியும். அதேநேரம் குடிபழக்கம் கல்லீரலை மட்டுமல்ல, இதயம், மூளை, கணையம் போன்ற பிற உறுப்புகளையும் பாதித்திருக்கும். அப்படி பாதித்திருந்தால் சிக்கல் தான். அதேபோல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கு முன்பு குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் மது அருந்தியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதேபோல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னர், மீண்டும் குடிக்கவே கூடாது.. இல்லாவிட்டால் புதிய கல்லீரலும் பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.அதேநேரம் இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 20 முதல் 50 லட்சம் வரையிலும் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள். சில நேரங்களில் அதைவிடவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். எல்லாவற்றுக்குமே மேலாக கல்லீரல் தானாமாக கிடைக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications