வரப்போகுது.. தமிழ்நாட்டில் 22 இடங்களில் 'ரோப் கார்'.. எங்கெங்கே தெரியுமா? ரெடி ஆகிறது ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் 22 இடங்களில் ரோப் கார் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலையில் இருக்கும் தண்டாயுதமாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப் பாதை ஆகியவை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது ரோப் கார் சேவை.

இந்நிலையில், போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்தில் நாடு முழுதும் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு, ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 22 இடங்களில் ரோப் கார் சேவையை தொடங்குவதற்கான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், திருச்சி, தென்காசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ரோப் கார் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு, அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகருக்கும், பழனி முதல் கொடைக்கானல் வரையும், ஊட்டி முதல் பைக்காரா, குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன், கொல்லிமலை, ஏற்காடு, திருச்சி மலைக்கோட்டை, குற்றாலம், கொடைக்கானல் ஸ்டார் ஏரி, திருமலை கோவில், சதுரகிரி, பர்வதமலை, அகத்தியர் அருவி, திருநீர்மலை,திருச்செங்கோடு, திருக்கழுக்குன்றம், திருத்தணி உள்ளிட்ட இடங்கள் தேர்வாகியுள்ளன.
இங்கெல்லாம் ரோப் கார் வசதியை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. ரோப் கார் சேவை சாத்தியமுள்ளதா என ஆராய்ந்து, சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் இரண்டு மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications