பச்சையப்பாஸ் Vs பிரசிடென்சி.. ரூட்டு தல பிரச்சினையில் பறிபோன உயிர்! என்றுதான் ஓயும் இந்த பஞ்சாயத்து!
சென்னை: சென்னை இரண்டு நாட்களுக்கு முன் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ரூட்டு தல விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், மாநில கல்லூரி மாணவர் சுந்தர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் கைகளில் கத்திகளுடன் பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் மாஸ் காட்டுவதாக நினைத்து அட்டகாசம் செய்து வரும் மாணவர்களின் அத்துமீறலால் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே சென்னையில் ரூட்டு தல பிரச்சனை காரணமாக மோதல்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை வருகிறது. அரசு பேருந்துகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. ரயில்களில் தாங்கள் தான் 'ரூட் தல' என கூறிக் கொண்டு இரு கல்லூரி மாணவர்களும் கல், கட்டை, பாட்டில்கள், பட்டாக்கத்திகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும் மாணவர்கள் தங்கள் உயிரை இழப்பதும் தொடர்ந்து வருகிறது.
போலீசார் எவ்வளவோ முயன்றும் இதனை தடுக்க முடியவில்லை. மேலும், கல்லூரி மாணவர்கள் ரவுடிகள் போல் செயல்படுவதை பார்க்கும் மக்கள் அச்சத்தில் உறைந்து வருகின்றனர். தொடர்ந்து ரயில்வே போலீசாரும் ரூட்டு தல பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு காவல் துறையும் மாணவர்களிடம் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான சுந்தருக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ரூட்டு தல விவகாரம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் சுந்தரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த சுந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ள மோதல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில். இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஐந்து மாணவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையில் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்க காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications