எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. பாட்டு பாடிய திமுக எம்எல்ஏ.. குறுக்கிட்ட துரைமுருகன்!
சென்னை: ராயபுரம் திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி முன்னாள் அமைச்சரும் அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான டி ஜெயக்குமார் குறித்து எம்ஜிஆர் பாடலை பாடினார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பட்ஜெட் மீதான விவாத உரையை ஆற்றி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காரசார விவாதம், கோபம், கொந்தளிப்பு, ஆறுதல், நகைச்சுவை என களை கட்டி வருகிறது.
இதில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் ராயபுரம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ஐட்ரீம் மூர்த்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் எம்ஜிஆர் பாடலை பாடினார்.

இந்த நாட்டிலே
அவர் எழுந்தவுடன்
"இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
பக்தனை போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
(இன்னும் எத்தனை காலம்தான்....)

சட்டசபை
இப்படித்தான் ராயபுரம் சட்டசபையில் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக ஒருவர் ஏமாற்றி வந்தார் என ஐட்ரீம் மூர்த்தி விமர்சனம் செய்தார். இதற்கு உடனே அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.

நீக்க தேவையில்லை
அப்போது அவை முன்னவர் துரைமுருகன், பொதுவாக அவையில் இல்லாத ஒருவரின் பெயரை சொல்லக் கூடாது. அவ்வாறு பெயர் சொன்னால்தான் தவறு. ஆனால் நம் உறுப்பினர் நீங்கள் ஆட்சேபிக்கும் அளவுக்கு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையே. அதனால் அதை நீக்க தேவையில்லை என்றார்.

5 முறை தொகுதி எம்எல்ஏ
கடந்த 5 முறை ராயபுரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வந்தவர் முன்னாள் மீன் வளத் துறை அமைச்சர் டி ஜெயக்குமார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த போதிலும் அவர் மக்கள் பணியை ஆற்றி வருகிறார். ராயபுரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த போது பொதுமக்கள் போராட்டம் நடத்தி எம்எல்ஏ வந்தால்தான் கலைவோம் என்றனர். அது குறித்த வீடியோவை டி ஜெயக்குமார் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications