மெட்ரோவை விட அதிவேகம்.. தமிழ்நாட்டில் 3 இடங்களில் வரும் RRTS ரயில்கள்.. தமிழக அரசு காட்டிய வேகம்!
சென்னை: தமிழக பட்ஜெட் அறிவிப்பின் படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே ரயில் அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.
வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

🔹சென்னை - திண்டிவனம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹கோயம்புத்தூர் - சேலம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
RRTS (Regional Rapid Transit System) என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். RRTS என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.
RRTSயின் முக்கிய அம்சங்கள்
அதிவேக ரயில்: மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும்.
வசதிகள்: ஏசி கோச்சுகள், Wi-Fi, ஆட்டோமெட்டிக் கதவுகள்.
வேகமான பயணம்: மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது.
சுற்றுச்சூழல் : மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம்.
டெல்லி-NCR முதல் கட்டம்: டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது.
வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
மெட்ரோ:
ஏற்கனவே ₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பணிகள் தீவிரம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications