டாஸ்மாக் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10.. ஜனவரி 19 முதல் அமல்! காலி பாட்டிலை கொடுத்து பணம் பெறலாம்!
சென்னை: காலி மது பாட்டில்களை திரும்பப் பெற்றுக்கொண்டு 10 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப் பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது.

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக் கொள்ளப்படும். காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பாட்டில் கழிவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு குவார்ட்டர் மது பாட்டிலுக்கும் எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கப்படுகிறது. இதில் அதோடு மேலும் 10 ரூபாயா என வெதும்புகின்றனர் குடிமகன்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications