சென்னைவாசிகளுக்கு.. வெறும் 100 ரூபாயில் ஜாக்பாட்.. ஒரே நாளில் டபுள் குஷி.. கலக்கும் சென்னை மெட்ரோ
சென்னை: பயணிகளின் வசதிக்காக அடுத்தடுத்த அதிரடிகளை சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டு வரும்நிலையில், இன்னொரு சிறப்பு சலுகையையும் வழங்கியிருக்கிறது. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. நெருக்கி தள்ளும் போக்குவரத்து பிரச்சினைக்கு, இந்த மெட்ரோவின் சேவை மிகப்பெரிய நிம்மதியை தந்து வருகிறது.
சென்னை மெட்ரோ: இப்போதைக்கு சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடம் உள்ளது. சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை காரணமாக, சென்னை மக்களும், மெட்ரோ ரயிலை நாடி வருகிறார்கள். இதனால், தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணித்திருக்கிறார்களாம்.. அதனால்தான், பயணிகளின் வசதிக்காகவே, பல்வேறு அதிரடிகளை மெட்ரோ அவ்வப்போது அறிவித்து வருகிறது. குறிப்பாக பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தி உள்ளது.
நேரம் மிச்சம்: சமீபத்தில் பேடிஎம் ஆப்பில் டிக்கெட் பெறும் வசதியும் கொண்டுவரப்பட்டது.. இதனால், பயணிகளின் நேரம் மிச்சமாக்கப்படுகிறது.. இப்போது, அடுத்த அதிரடியை மெட்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக, மெட்ரோவில் ஒவ்வொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால், ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. ஆனால் 100 ரூபாய்க்கு சுற்றுலா சிறப்பு பயண அட்டை எடுத்தால், ஒரு நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
சபாஷ் வசதி: இதன்படி 150 ரூபாய் செலுத்தி இந்த இந்த சிறப்பு அட்டையை வாங்கிக்கொண்டு, ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம்... சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும்.. பயண முடிவில் சிறப்பு அட்டையை திரும்ப கொடுத்து, ஏற்கனவே தந்திருந்த 50 ரூபாயை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.. அதுமட்டுமல்ல, வார இறுதி நாட்களிலும் இந்த சலுகையை பயன்படுத்தலாம் என்று, ஒரு நாள் மட்டுமே இந்த சிறப்பு பயண அட்டை செல்லுபடியாகும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications