Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு சார்பில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை? உண்மை என்ன? போக்குவரத்து ஆணையர் முக்கிய அப்டேட்

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை அரசு சார்பில் வழங்கப்பட உள்ளதாக செய்தி பரவுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் பெயரில் அரசு சார்பில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் அதுபற்றிய உண்மை நிலை பற்றி போக்குவரத்து ஆணையர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதாவது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.1000 உரிமைத்தொகை

ரூ.1000 உரிமைத்தொகை

மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறியது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர்களுக்கு ரூ.1000?

ஓட்டுநர்களுக்கு ரூ.1000?

இந்நிலையில் தான் சமூக வலைதளத்தில் தற்போது ஒரு செய்தி பரவுகிறது. அதாவது தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் பெயரில் பரவும் அந்த செய்தியில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை அரசு சார்பில் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் ரூ.1000 நிவாரணத்தொகை பெற முயற்சி எடுத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து ஆணையர் முக்கிய விபரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

உண்மைக்கு புறம்பானது

உண்மைக்கு புறம்பானது

அதில், ‛‛தமிழ்நாடு ஓட்டுநர் ம்றறும் தொழிலாளர் நலச்சங்கம், சென்னை 34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் வங்கி கணக்கில் ரூபாய் 1000 நிவாரண தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை

காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை

இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பப்டவில்லை. இது தவறான தகவலாகும் என்பது தெரிவித்து கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமயைான நடவடிக்கை மேற்கெள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை வழங்கும் திட்டம் எதையும் அரசு அறிவிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+