ரேஷன் கடைகளுக்கு போன ஸ்வீட் அறிவிப்பு.. பெண்களுக்கு குஷியோ குஷி! ரூ.1000 உரிமை தொகை.. முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளது. மற்ற மாநிலங்களில் கூட இது தேர்தல் வாக்குறுதிகளாக மாறியது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Rs.1000 Kalaingar Housewives scheme: Important notification to Tamil Nadu Ration Shops by CM Stalin

செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில்தான் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளிகளின் கைவிரல் ரேகை பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நீங்கள் விண்ணப்பத்தை வாங்க செல்லும் போது கைரேகையை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அனைத்து நியாயவிலை கடைகளிலும் ரூ 1000 திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இந்த திட்டத்திற்காக 15000 RD biometric devices எனப்படும் கருவிகளை தமிழ்நாடு அரசு வாங்க முடிவு செய்துள்ளது. இது ஆதார் முறையில் கைரேகையை சோதனை செய்யும் கருவி.

ரேஷன் கடைகளில் வைப்பதற்காக இந்த கருவி வாங்கப்பட உள்ளது. RD biometric devices மூலம் உங்களின் கை ரேகை எடுக்கப்பட்டு ஆதார் சரி பார்ப்பு செய்யப்படும். அந்த ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்குகளில் நீங்கள் கொடுத்து இருக்கும் உங்கள் தனிப்பட்ட வங்கி கணக்கு திட்டத்தில் பதிவேற்றப்பட்டு, அதற்கு பணம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்?:

  • குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்
  • ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
  • 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
  • ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
  • குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
  • திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்
  • ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:

  • குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
  • மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
  • ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
  • சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
  • ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
  • ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+