ரூ.10000 ஆக உயரும் அபராதம்! சென்னைக்கு பிறந்த விடிவுகாலம்.. மாடு வளர்ப்பவர்களுக்கு செக்! அப்படி போடு
சென்னை: சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மாடுகள் வளர்க்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் மாடு வளர்த்து வருகின்றனர். அதோடு அதை சாலையிலும் விடும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி பள்ளியை முடித்துக்கொண்டு தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று மாணவி மீது பாய்ந்தது. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவியின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வரிசையாக பல இடங்களில் மக்கள் மாடு தாக்கி காயம் அடைந்தனர்.
நங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் அடிக்கடி மாடுகள் இப்படி மக்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதில் , சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதோடு சாலையில் மாடுகளை விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்ய சென்ற மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடு உரிமையாளர்கள், மாடுகளை பிடித்து செல்ல கூடாது என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. அதோடு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாடு உரிமையாளர்களுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விதித்தார்.
இந்த நிலையில்தான் சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறிய உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, ரூ. 2,000 இருந்து ரூ. 10,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி இம்மாத இறுதியில் தீர்மானம் நிறைவேற்றி, வரும் அக்டோபர் முதல் புதிய அபராதத்தை வசூலிக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் மாடு, மாட்டு உரிமையாளர்களின் கணக்கெடுக்கும் பணி துவக்கம். சாலையில் திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும். அரும்பாக்கம் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பின் 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. சாலையில் கேட்பாரின்றி சுற்றி திரியும் மாடுகள் எல்லாம் விரைவில் பிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு சம்பவம் :"சமீபத்தில், நங்கநல்லூரில் கண்ணன்(51) என்பவர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை மாடு ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் கண்ணனின் வயிறு கிழிக்கப்பட்டு குடல் வெளியே வந்திருக்கிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் கண்ணன் அங்கே துடிதுடித்து விழுந்திருக்கிறார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications