இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது.. மாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பு.. எப்படி?
சென்னை: இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது; இனி 2000 நோட்டுகள் உங்கள் கையில் இருந்தால் உடனேவங்கிக்கு சென்று மாற்றிக்கொள்ளுங்கள். செப்டம்பர் 30ம் தேதி தான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி நாள் ஆகும்.
இன்று முதுல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள். பெட்ரோல் பங்க், டாஸ்மாக், அரசு பேருந்துகள் என எதிலும் இனி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டார்கள்.

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 29ம் தேதியும், நாளை செப்டம்பர் 30ம தேதி ஆகிய இரு நாட்கள் மட்டுமே மாற்றிக்கொள்ள நேரம் உள்ளது. ஆனால் பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டன.
இதேபோல் செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்க கொடுத்தால் அதை வாங்க வேண்டாம் என கண்டக்டர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 29ம் தேதி முதல் அதாவது இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகளில் ₹2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே ரிசர்வ் வங்கியின் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஆகஸ்ட் 31 நிலவரப்படி ரூ.0.24 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி ஆகும். அதாவது, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியான மே 19-ம் தேதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருந்தது. இந்நிலையில் மீதமுள்ள நோட்டுகளும் பெரும்பாலும் வந்திருக்கும் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
உங்கள் கையில் இன்னமும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் எப்படி மாற்றுவது? 20,000 ரூபாய் வரை ஒரே நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஆவணமும் இல்லாமல் உங்கள் வங்கியில் போய் இன்று மற்றும் நாளை (அதாவது செப்டம்பர் 30க்குள்) மாற்றிக்கொள்ளலாம். உங்களிடடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் இருந்தால் பான் தகவல்களை செலுத்தி ரூபாய் 50,000 வரை மாற்றிக்கொள்ள முடியும். கே.ஒய்.சி- சரியாக செய்திருந்தால், எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம்.
உங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லாமல் ஆர்.பி.ஐ என் ரீஜனல் அலுவலகங்களிலும் நாளை (செப்டம்பர் 30-ம் தேதி) வரை மாற்றிக் கொள்ள முடியும். அதன்பிறகும் உங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டு இருந்தால், அதாவது அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) உங்கள் கையில் 2000 நோட்டு இருந்தால், அந்த பணம் செல்லாது. அரசு காலஅவகாசத்தை நீட்டிக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.எனவே மக்களே விழிப்புடன் பணத்தை மாற்றிக்கொள்வது நல்லது. இன்னமும் 25000 ஆயிரம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய ரூபாய் நோட்டுகள் மொத்தமாக மாறப்போகுது! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! இனி கிழியவே கிழியாது -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications