Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ரூ. 3 கோடி+ வீடுகள் விற்பனை அதிகரிப்பு.. குறைந்த விலை வீடுகளின் விற்பனை பெரும் சரிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 3 கோடிக்கும் அதிகமான சொகுசு வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. அதேநேரம் குறைந்த விலை மற்றும் நடுத்தர விலையில் உள்ள வீடுகளின் தேவை கணிசமாக சரிந்துள்ளது. சென்னை மட்டுமல்ல, , பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் முதல் தர நகரங்களில் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர வீடுகளையே மக்கள் விரும்புகிறார்கள். லைப் ஸ்டைல் அடிப்படையில் மிகவும் ஆடம்பர வீடுகளை பணக்காரர்கள் விரும்புகிறார்கள் என்பது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் ஒரு காலத்தில் நடுத்தர பட்ஜெட் வீடுகள், சிறிய வீடுகள் தான் அதிகமாக விற்பனையாகும். அதை வாங்க மக்கள் போட்டி போடுவார்கள்.. ஆனால் இப்போது அப்படி இல்லை.. யாருக்கும் வேலை உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.. அந்த வேலை போனால், அதே சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ற சூழலும் இல்லை. ஐடி துறையில் என்ன தான் சம்பளம் அதிகம் என்றாலும், வேலையில் நிச்சயமின்மை அதிகரித்துவிட்டது. அதேபோல் அரசு ஊழியர்கள் எண்ணிக்கையும் ஒரு சதவீதம் அளவிற்கு கூட இருக்காது. அவர்களில் அதிக சம்பளம் வாங்குவோரும் குறைவு. எனவே நடுத்தர மற்றும் குறைந்த விலை வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது.

Rs 3 Cr Homes Drive Housing Sales Surge in Chennai Sales of Lower-Priced Homes Decline in India

சொகுசு வீடுகள் விற்பனை அதிகரிப்பு

அதேநேரம் பெரும் கோடீஸ்வரர்கள், செல்வந்தர்கள் விரும்பும் விலை உயர்ந்த சொகுசு வீடுகளில் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவின் முதல் தர நகரங்களில் ஜனவரி முதல் ஜூன் வரை, மொத்தம் ரூ. 3.6 லட்சம் கோடி மதிப்புள்ள சொகுசு வீடுகள் விற்பனை நடந்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ரூ. 3.3 லட்சம் கோடி அளவிற்கு தான் விற்று இருந்தது. எனவே ஆண்டுக்கு ஆண்டு விற்பனை விகிதம் 9% அளவிற்கு அதிகரித்து இருப்பதை இந்தபுள்ளி விவரம் வெளிப்படுத்துகிறது. அதேநேரம்
விற்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 4% சரிவு இருந்தபோதிலும் (270,000 இலிருந்து 254,000 யூனிட்களாக), சராசரி சொத்து மதிப்பு அளவு 14% உயர்ந்து ரூ. 1.42 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது ஆடம்பரமான சொகுசு வீடுகளுக்கான வலுவான தேவையைக் குறிக்கிறது

டெல்லி முதலிடம்

NCR என்று அழைக்கப்படும் (தேசிய தலைநகர் மண்டலம்) டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நாட்டிலேயே அதிகமான சொகுசு வீடுகள் விற்பனையாகி உள்ளது. இது நாட்டின் மொத்த வீடு விற்பனை மதிப்பில் 26% என்கிற அளவில் முன்னிலை உள்ளது. என்சிஆர் பகுதியை பொறுத்தவரை ஆடம்பர வீடுகள் தான் அதிகம் பேரால் விருப்படுகிறது. டெல்லியில் விற்பனையாக வீடுகளில் 73% அளவிற்கு ரூ. 3 கோடிக்கு மேல் விலையுள்ள வீடுகள் ஆகும். எனினும் சொகுசு வீடுகள் 25,000 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டன. அதாவது சொத்தின் மதிப்பு அதிகம் என்பதால் டெல்லி முன்னிலையில் உள்ளது.


ஹைதராபாத்

அதேநேரம் இந்தியாவின் முதல் தர நகரங்களில் நடுத்தர வீடுகளின் விற்பனை சரிந்துள்ளது. அதாவது ரூ. 70 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனை சரிந்துள்ளது. ஹைதராபாத் நகரத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த மதிப்பில் 2% அதிகரித்துள்ளது. ஆனால் அளவில் 11% சரிந்துள்ளது. (சுமார் 30,000 யூனிட்டுகள் விற்பனையானது). கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் 10-17% வரை வீடுகள் விற்பனை வளர்ந்துள்ளது. ஆனால் மற்ற நகரங்களை போலவே அதிக விலை கொண்ட பிரிவுகளே விற்பனையாகி உள்ளன.

புனே விதிவிலக்கு

ஆனால் புனே நகரம் மட்டும் விதிவிலக்காக உள்ளது. விற்பனை மதிப்பு 8.5% குறைந்துள்ளது. வீடுகள் விற்பனையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது, சுமார் 14% குறைந்து 45,000 யூனிட்டுகள் விற்றுள்ளன. இந்தியாவின் முதல் தர நகரங்களில், புதிய வீடுகள் வெளியீடுகள் ஜனவரி முதல் ஜூன் 2024 வரை 98,000 யூனிட்டுகளிலிருந்து ஜனவரி முதல் ஜூன் 2025 வரை 82,000 ஆகக் குறைந்துள்ளது. இது அதிகரித்து வரும் கட்டுமான செலவுகளுக்கு மத்தியில் டெவலப்பர்கள் எச்சரிக்கையாக இருப்பதை காட்டுகிறது.

குறைந்த விலை வீடுகள் விற்பனை சரிவு

ஜனவரி முதல் ஜூன் வரை முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளது. சொகுசு மற்றும் அல்ட்ரா-பிரீமியம் வீடுகள் மொத்த மதிப்பில் ஏற்றத்திற்கு வழிவகுத்தன. விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட வீடு வாங்குபவர்கள் அதிக விலையுள்ள வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதால் மதிப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் நடுத்தர பிரிவு மற்றும் மலிவு விலை வீடுகள் விற்பனை சரிந்துள்ளது. இதுவே பில்டர்கள் புதிய திட்டங்களை வெளியிடுவதற்கு தயங்க காரணமாக உள்ளது. நாட்டிலேயே புனே மட்டுமே மற்ற பெருநகரங்களைப் போலல்லாமல், மதிப்பு மற்றும் அளவு இரண்டிலும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+