சிக்கிய குன்றத்தூர் கமிஷ்னர் குமாரி.. வங்கி லாக்கர்களை திறந்து பார்த்தால்.. திகைத்த காஞ்சிபுரம் போலீஸ்
சென்னை: சென்னையில் நிலத்தை வரன்முறைப்படுத்த லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான குன்றத்தூர் நகராட்சி ஆணையாளர் குமாரியின் வங்கி லாக்கரில் இருந்து பல லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரான முனுசாமிக்கு குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 நிலங்கள் இருக்கிறது. இவர் அந்த காலி நிலங்களில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெற விரும்பினார். இதற்காக குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த முனுசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தார்.

குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி இதனை பரிசீலித்த நிலையில், நிலம் வரன்முறை செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆனால் சான்றிதழை வழங்க ஒரு வீட்டுமனை வரன்முறைக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.36 ஆயிரம் லஞ்சமாக தரும்படி குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது முனுசாமி, ஒரு நிலம் வரன்முறைக்கு ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் தருவதாக கூறி பேசி முடித்திருக்கிறார்.
அதே நேரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி, இதுபற்றி காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி, குன்றத்தூர் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அவர்களின் ஏற்பாட்டின் பேரில், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முனுசாமியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அந்த பணத்துடன் முனுசாமி, கடந்த ஜனவரி 11ம் தேதி குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். ஆனால் 3 வீட்டுமனை வரன்முறைகளுக்கு ரூ.36 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே நிலம் வரன்முறைப்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுக்கப்படும் என அதிகாரிகள் கறாராக கூறினர். இதையடுத்து ரூ.24 ஆயிரம் பெற்றுக்கொண்டு 2 வீட்டுமனைகளுக்கான வரன்முறை சான்றிதழ் கொடுக்குமாறு முனுசாமி கோரிக்கை வைத்தார்.
பின்னர் ரசாயன பொடி தடவிய லஞ்ச பணத்தை அலுவலக உதவியாளர் சாம்சனிடம் முனுசாமி கொடுத்தார். அவர் லஞ்ச பணத்தை கையில் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அலுவலக உதவியாளர் சாம்சனை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கூறியதன் பேரிலேயே தான் லஞ்ச பணத்தை வாங்கியதாக சாம்சன் தெரிவித்தார். இதையடுத்து குன்றத்தூர் நகராட்சி கமிஷனர், நகரமைப்பு ஆய்வாளர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நகராட்சி கமிஷனர் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அதில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணத்தையும், 3 வங்கி லாக்கர் சாவிகளையும் பறிமுதல் செய்திருந்தனர் இதனிடையே குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் குமாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் செங்கல்பட்டு தலைமை கூடுதல் நீதிபதியின் உத்தரவின்பேரில் பறிமுதல் செய்யப்பட்ட நகராட்சி கமிஷனர் குமாரியின் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று (ஜன 29) சேலையூர் எச்டிஎப்சி பேங்க் லாக்கரில் குமாரியின் கணவர் யோகமன்னன் மற்றும் குமாரி ஜாயிண்ட் அக்கவுண்டில் 8 லட்சம் பணமும் , ஆக்சிஸ் வங்கியில் 20 லட்சம் பணமும் , தாம்பரம் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 லட்சம் பணமும் மொத்தம் ரூ 33 லட்சத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications