வந்தது அறிவிப்பு.. அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நடத்த ரூ.38 லட்சம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு
அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிக்கு ரூ.38 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது
சென்னை: அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டியை நடத்துவதற்கான தொகையினை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு துறைகளில் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறது.
அந்த வகையில், விளையாட்டு துறையிலும், பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. கடந்த ஏப்ரல் மாதம், தமிழக சட்டசபையில், இது தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் வெளியாகின.

திமுக
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் இளைஞர்கள் நலன் கருதி வெளியாகின.. குறிப்பாக, அந்த துறையின் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை அப்போது வெளியிட்டிருந்தார்..

சைக்கிள் போட்டி
அதேபோல, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது என்றும், அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.38 லட்சமாக உயர்த்தி புதுப்பொலிவுடன் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.. இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா
முன்னதாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை கொண்டாடும் வகையில் 2004-2005 ம் ஆண்டு முதல் வருடந்தோறும் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று மாவட்ட அளவில் அண்ணா மிதிவண்டி போட்டிகள் ரூ.3,125 வீதம் 32 மாவட்டங்களில் ரூ.1,00.000 மதிப்பீட்டில் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது... இந்த நிலையில், அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை நடத்துவதற்கான தொகையினை ஒரு லட்சத்திலிருந்து, ரூ.38 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சைக்கிள்
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக விளையாட்டு போட்டிகள் நடப்பது வழக்கம்.. 13 வயது, 15 வயது, மற்றும் 17 வயது உடையவர்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு, போட்டி நடத்தப்படும்.. இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பதும் நடந்து வருகிறது.. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கு பெற்று வருகின்றனர்.. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்த பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications