ரூ.4 கோடி விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு உதவி.. சிக்கிய 3 பாஜக தலைகள்.. ஆதாரத்துடன் சிபிசிஐடி!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் உதவியதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கூறி இருக்கின்றனர். பாஜகவின் நிர்வாகிகளான கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர் மற்றும் கோவர்தன் ஆகிய 3 பேரும் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதனால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படை தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அந்த வகையில் சென்னை - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பின் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தைக் கொண்டு வந்த 3 பேரைத் தாம்பரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் சதீஷ் என்பவரும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரனுக்கு ரயில் மூலம் பணம் அனுப்பப்பட்டதாகப் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் உள்ள பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ரூ.4 கோடி பணம் கைமாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டனர். அதேபோல் இந்த வழக்கில் ஹவாலா தரகர் சூரஜ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாமீன் கோரி ஹவாலா தரகர் சூரஜ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் சிபிசிஐடி தரப்பில், நயினார் நாகேந்திரனுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்ஆர் சேகர், கோவர்தன் ஆகியோர் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலமாக உறுதியாகியுள்ளது. கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷ் மூலமாக ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளுக்குப் பதிலாக ரூ.97.92 லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஹவாலா தரகர் சூரஜ் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலமாக உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக பிரமுகர்கள் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சிக்கலில் மாட்டி இருப்பதாக பார்க்கப்படுகிறது. விரைவில் சிபிசிஐடி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications