வாவ்.. இனி சென்னை அருகேயே ஜாலி பண்ணலாம்! 62 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமையும் ‛வொண்டர்லா’.. எங்கு?
சென்னை: சென்னை அருகே 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் புதிதாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கான பூமிபூஜை முடிந்துள்ளது.
விடுமுறை காலங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். பலரும் கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வகையில் நீர் விளையாட்டுகள், அட்வென்சர்ஸ் கேம்கள் அங்கு இருக்கின்றன. இதனால் பலருக்கும் வொண்டர்லா என்பது ‛பேவரைட் பிளேஸ்' ஆக இருக்கிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போனது. இந்நிலையல் தான் சென்னை அருகே ‛வொண்டர்லா' பொழுதுபோக்கு பூங்கா அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா இள்ளளூர் கிராமத்தில் 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் ‛வொண்டர்லா' அமைக்கப்பட உள்ளது. இந்த இள்ளளூர் கிராமம் என்பது சென்னையில் இருந்து வெறும் 45 கிலோமீட்டர் தொலைவில் பழைய மகாபலிபுரம் சாலையில் தான் இருக்கிறது. இதன்மூலம் சென்னை அருகேயே ‛வொண்டர்லா' பொழுது போக்கு பூங்கா அமைகிறது.
மேலும் தற்போது ‛வொண்டர்லா' அமையும் கிராமம் என்பது ஓஎம்ஆர் நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைய உள்ளது. இதனால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் எனகூறப்படுகிறது. இந்நிலையில் தான் ‛வொண்டர்லா' நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ‛வொண்டர்லா' கட்டுமான பணிகள் என்பது தொடங்கி நடைபெற உள்ளது.
தற்போது ‛வொண்டர்லா' என்பது கர்நாடகா தலைநகர் பெங்களூர், கேரளா மாநிலம் கொச்சி மற்றும் ஆந்திர தலைநகர் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளது. ஒடிசாவில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னை அருகே ‛வொண்டர்லா' அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வொண்டர்லா இன்னும் சில மாநிலங்களில் பொழுதுபோக்கு பூங்காக்களை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசம், பஞ்சாப், கோவாவில் வொண்டர்லா சார்பில் பொழுதுபோக்கு பூங்காக்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications