ரூ. 460 கோடி சொத்து; அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்! கொடி கட்டி பறக்கும் அல்லு அர்ஜுன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய நடிகர்களில் அதிகம் சம்பளம் பெறுபவராக 'புஷ்பா’ நாயகன் அல்லு அர்ஜுன் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளார்.

ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவில் எடுக்கப்படும் ஹிந்தி படங்களை டப்பிங் செய்து வெளியிடும் அளவுக்குத்தான் தென் இந்திய சினிமா துறை இருந்தது. ஆனால், இன்றைக்கு வடநாட்டில் சவுத் இண்டியன் சினிமா நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

allu arjun pushpa 2

வட இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட தமிழ் நடிகராக விஜய் இருக்கிறார். அதேபோல் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் படங்கள் அதிக வசூலை இந்தி பேசும் மாநிலங்களை வாரி குவித்து வருகிறது. அதுவும் 'புஷ்பா’வுக்கு பிறகு அவர் மார்கெட் வேல்யூ எங்கேயோ போய்விட்டது. அதன் தொடர்ச்சியாக வெளியான 'புஷ்பா 2’ பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்திருக்கிறது.

குறிப்பாக சொன்னால், ஷாருக்கானின் 'ஜவான்', பிரபாஸ் நடித்த 'பாகுபலி 2' வசூலை முறியடித்திருக்கிறது. இந்த இரண்டு படங்களும் வெளியான ஒரே நாளில் சுமார் ரூ.282 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், 'புஷ்பா 2' டைம்ஸ் ஆப் இந்தியாவின் தகவலின்படி ரூ.460 கோடியை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தில் புஷ்பா ராஜ் வேடத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் சுமார் ரூ.300 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி தெரியவந்துள்ளது.

இதனால் இந்த 2024 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற இடத்தை எட்டிப் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன் என என ஃபோர்ப்ஸ் அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டி இருக்கிறது. இவருக்கு வட இந்தியாவில் எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு தென் இந்திய மொழிகளிலும் உள்ளது.

இந்நிலையில்தான் அவரது குடும்பம் பற்றிய செய்திகளை இணையத்தில் பலரும் தேடத் தொடங்கியுள்ளனர். அல்லு அர்ஜுன் பத்து ஆண்டுகள் முன்னதாக சினேகா ரெட்டியை மணந்தார். 2010இல் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் 2011 திருமணம் செய்துகொண்டனர். இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அயன் 2014இல் பிறந்தார். 2016இல் அர்ஹா பிறந்தார்.

யார் இந்த சினேகா ரெட்டி? : ஆந்திராவில் மிகப்பெரிய தொழிலதிபர் கஞ்சர்லா சந்திரசேகர் ரெட்டி. கல்வி நிறுவனங்களில் தந்தை இவர். தெலுங்கானாவில் இவரது scient institute of technology கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. ஹைதராபாத் ஓக்ரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற சினேகா, உயர்கல்வி பெற வேண்டி கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தார்.

அதன்பின்னர் அமெரிக்காவில் கணினி அறிவியலில் முதுநிலைப் படிப்பைப் பெற்றார். இந்தியா திரும்பிய அவர் தனது தந்தையின் கல்வி நிறுவனத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பிரிவு இயக்குநராக இருந்தார். திருமணத்திற்குப் பின்னர் கடந்த 2016இல் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில்ன் பகுதியில் ஸ்டுடியோ பிகாபூ என்ற ஆன்லைன் புகைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அல்லு அர்ஜுன் எந்தளவுக்கு சினிமா உலகில் பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அல்லு சினேகா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வருகிறார். இவர் கணக்கை 9 மில்லியன் பேருக்கு மேல் பின் தொடர்கிறார்கள். அதில் தனது கணவரைப் பற்றி குடும்பத்தைப் பற்றிய பல மகிழ்வான செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

சினேகாவின் சொத்து மதிப்பு மட்டும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 42 கோடி. ஆனால், இவரது கணவர் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர். இந்தத் தம்பதியின் மிகப் பெரிய பங்களா ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ளது. தனி ஜெட் விமானம் வைத்துள்ளார் அல்லு. இவை தவிர ஆடம்பர கார்கள் பல வைத்துள்ளார். மேலும் பல பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் மட்டும் ரூ. 460 கோடியைச் சம்பாதித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+