மதமாற்றத்தை தடுத்த ராமலிங்கம் கொலை- தலைமறைவான 5 பேர்- தகவல் தந்தால் ரூ5 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ.
சென்னை: மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டதால் திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தலைமறைவாக இருக்கும் 5 பேர் குறித்து தகவல் தந்தால் ரூ5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தலைமறைவு நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமகவின் உறுப்பினராக இருந்தவர். திருபுவனம் கடை வீதியில் தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ் என்ற பெயரில் சமையல் ஒப்பந்ததாரராகவும் சமையல் பொருட்களை வாடகைக்கு கொடுப்பவராகவும் தொழில் நடத்தி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை ராமலிங்கம் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் ராமலிங்கத்தின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு
இந்த சம்பவம் தமிழகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். பின்னர் மதமாற்றம் தொடர்பான விவகாரம் என்பதால் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தலைமறைவான 5 பேர்
என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 5 பேரை தேடி வந்தனர். மேலும் இந்த 5 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாகவும் 2019-ல் அறிவித்து இவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

2-வது முறையாக அறிவிப்பு
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடியும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தலைமறைவாக உள்ள இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது 2-வது முறையாக தலைமறைவான 5 பேர் குறித்த அறிவிப்பை என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது.

தகவல் யாரிடம் தெரிவிப்பது?
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, எண். 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை - 600 010. கைபேசி எண். : +91 9962361122 தொலைபேசி எண். 044 - 26615100. Mail ID : [email protected] ஆகிய முகவரியில் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் என்ஐஏ அறிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications