வானிலை முன்னறிவிப்பு குழப்பத்தை தடுக்க ரூ.10 கோடியில் திட்டம்! சென்னை வெள்ள தடுப்புக்கு ரூ.500 கோடி
சென்னை: வருவாய் பேரிடர் மேலாண் துறையின் கீழ் சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடியும், வானிலை முன்னறிவிப்புக்கான கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடியும், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4816 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 பட்ஜெட் தாக்கல் செய்தார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை குறித்து அவர் கூறிய அறிவிப்புகள் வருமாறு:
அரசு நிலங்களில் நில அளவை துல்லியமாகவும், எளிமையாகவும் மேற்கொள்ள தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்கள் வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நில அளவை பணிகளை மேம்படுத்த நில அளவையாளர்களுக்கு ரோவர் கருவி வழங்கப்படும். இதற்கு ரூ.15 கோடி வழங்கப்படுகிறது

அரசு நில மீட்புக்கு...
பரவலான சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியமாகும். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களை தீர்க்கவும், விரிவான நில குத்தகைக்கும் கொள்ளை வகுக்கப்படும். நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு ரூ.500 கோடி
சென்னை பெருநகர் வெள்ள பாதிப்பை தடுக்க தக்க பரிந்துரை வழங்கும் வகையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைப்படி வெள்ள தடுப்பு பணி முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை கணிப்பு
வானிலையை துல்லியமாக கணிக்க, பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை அண்மையில் சென்னை வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியது. பேரிடர் தாக்கும் முன்பு எச்சரிக்கையை வழங்க வானிலை பலூன் அமைப்பு, 2 வானிலை ரேடார், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழை மானிகள், 11 தானியங்கி நீர்மட்ட கருவிகள், அதிவேக கம்யூட்டர்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பு உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

ஓய்வூதிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனிற்காக அரசால் செயல்படுத்தப்படும் முதியார் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஒய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ப்லவேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக ரூ.4816 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.7,474.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications