அமித்ஷாவை நெருங்கும் உதயநிதி? கூடவே "தங்கம்".. இதுதான் விஷயமா? ஸ்டாலினின் மூவ்? கவனிக்கும் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை அல்லது நாளை மறுநாளே, டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திக்க போகிறாராம் திமுக அமைச்சர் உதயநிதி.. இப்படி ஒரு தகவல் கசிந்துவரும் நிலையில், இதற்கான சில காரணங்களும் வட்டமடிக்கின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.. 4 மாவட்டங்களிலுமே பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

rs6 thousand Relief Fund for Chennai Flood and Udhayanidhi Stalin going to Delhi to meet Amit Shah

இதனால், அம்மாவட்ட மக்களால், இப்போதுவரை அந்த துயரத்திலிருந்து மீள முடியவில்லை.. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கு பிறகு 6000 ரூபாய் நிவாரண தொகையை அரசு அறிவித்தது.. ஆனால், எந்த நிபந்தனையும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்... அத்துடன், டபுள் மடங்காக அதாவது 12 ஆயிரம் ரூபாயாக நிவாரணத்தை உயர்த்தி தரும்படி கோரி வருகிறார்.

பாதிப்புகள்: மற்றொருபுறம், திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலேயே, மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிமுக, பாஜக கட்சிகள் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன..

ஆனால், மக்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டுதான், அரசு தரப்பில் நிவாரணம் தர வேண்டியிருக்கிறது. அந்தவகையில், நிவாரண தொகையை அறிவித்தாலும்கூட, இதையும் எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி கொண்டிருக்கின்றன.

வெள்ள நிவாரணம்: இதனிடையே, வெள்ள சேதத்தை கணக்கிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்திருக்கிறார்கள்.. முதல்வரை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளதாக தெரிகிறது.. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே முதற்கட்டமாக இடைக்கால நிவாரண தொகையாக ரூ.5060 கோடி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இப்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. அதனால், கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறதாம். மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கையை சமர்ப்பித்ததுமே, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

2 அமைச்சர்கள்: இவர்கள் 2 பேருமே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, புயல்-வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதியை வழங்குமாறு வலியுறுத்த போகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, என்னென்ன சேதத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களுடன் லிஸ்ட்டை, கோரிக்கை மனுவாகவும் அமித்ஷாவிடம் வழங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொருபக்கம், முதல்வர் ஸ்டாலினே நிவாரண நிதி கேட்க, டெல்லி செல்லலாம் என்கிறார்கள்.. வரும் 18ம் தேதி, நிகழ்ச்சி ஒன்றுக்கு கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அன்றைய தினம் சென்னைக்கு திரும்புவதாக திட்டம் உள்ளது. எனினும், சென்னை திரும்புகிறாரா அல்லது கோவையிலிருந்து டெல்லி செல்கிறாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்.

இந்தியா கூட்டணி: ஆனால், அரசியல் ரீதியாக, பிரதமர் மோடியை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்பதை, "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவே, மோடியை ஸ்டாலின் சந்திப்பதை தவிர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

அதனால்தான், அமித்ஷாவை சந்தித்து, வெள்ள நிவாரண தொகையை கூடுதலாக பெறுவதற்குரிய கோரிக்கை மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளும், உதயநிதி தரப்பில் செய்யப்பட்டு வருகிறதாம்.

ஆனால், இந்த நிவாரண தொகை விஷயத்தில், பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களின் கோரிக்கையை ஓரளவு நிறைவேற்றும்பட்சத்தில், நிச்சயம் அது திமுக அரசுக்கான நன்மதிப்பை கூடுதலாகவே பெற்றுத்தந்துவிடும் என்று நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+