Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ரூபாய் இருக்கா? உடனே வங்கி கணக்கிலிருந்து அனுப்புங்க.. ஆன்லைனில் "அடிபட்ட" பிரபல நடிகர்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல நடிகர் ஒருவரின் வங்கி கணக்கில் பணம் மாயமாகி உள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

சமீபகாலமாகவே, பிரபல வங்கிகளின் பெயர்களை சொல்லி, மோசடி வேலைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே வருகின்றன.

rs10 Bank Account

அதேபோல, வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்றும் வங்கிகள் வார்னிங் கொடுத்து வருகின்றன.

வங்கி கணக்கு: அதேபோல இன்னொரு பக்கம் சைபர் கிரைம் போலீசாரும், பொதுமக்களை அலர்ட் செய்து வருகிறார்கள்.. எந்த வங்கியிலிருந்தும், ஒருபோதும் ஓடிபி-யை யாருமே கேட்க மாட்டார்கள். அதனால், யாராவது உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

இவ்வளவு அலர்ட் செய்துவந்தபோதிலும், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.. இதோ இப்போது, ஒரு பிரபலமே மோசடி நபர்களால் ஏமாந்துள்ளார்.

ஆன்லைன் மோசடி: மும்பையை சேர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால்.. இவர் தாதர் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.. இவர் தன்னுடைய உடல்நலம் தொடர்பாக எலும்பு சிகிச்சை டாக்டரை சந்திக்க விரும்பினார். இதற்காக தன்னுடைய பகுதியிலேயே யாராவது பிரபல டாக்டர்கள் இருக்கிறார்களா? என்று ஆன்லைனில் தேடினார்.

அப்போது, ஒரு போன் நம்பர் கிடைத்தது.. அந்த நம்பருக்கு போன் செய்து டாக்டரை பார்க்கவேண்டும் என்று இக்பால் சொல்லி உள்ளார்.. போனில் பேசிய நபர் டாக்டரை பார்க்கவேண்டுமானால், ரூ.10 தந்து, முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன் 2 லிங்குகளையும் அனுப்பி வைத்தார்.

நடிகர் இக்பால்: நடிகர் இக்பாலும், 10 ரூபாய் பணம் அனுப்புவதற்கு அந்த இரண்டு லிங்க்குகளை ஓபன் செய்தார்.. ஆனால், அதில் பணம் அனுப்ப முடியவில்லை... இதனால், தன்னுடைய அக்கவுண்ட்டில் ஏதோ பிரச்சனையில் என்பதை உணர்ந்த இக்பால் இது குறித்து தனது வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.

இந்த சம்பவம் முடிந்து அடுத்த 4 நாட்களில் இக்பால் செல்போன் நம்பருக்கு அடுத்தடுத்து மெசேஜ்கள் வந்தன.. அதில் இக்பால் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.77 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இக்பால், உடனே சைபர் பிரிவு நம்பருக்கு போன் செய்து புகார் தந்தார்.. இந்த புகார் தொடர்பாக சைபர் பிரிவு போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதம்பாக்கம்: இப்படித்தான் 10 நாட்களுக்கு முன்பு, சென்னை ஆதம்பாக்கத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.. வினோத் என்ற கூலித்தொழிலாளி தன்னுடைய செல்போனில் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தார்.. அப்போது அதில் " 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டு வெற்றி பெறுங்கள். ரூ.5 ஆயிரம் கேஷ் பேக் பெறுங்கள்" என்று விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்ததுமே வினோத்துக்கு சபலம் வந்துவிட்டது.500 ரூபாய்க்கு, 5000 ரூபாயா? என்று ஆச்சரியப்பட்டு, அதிலிருந்த லிங்க்கை கிளிக் செய்தார்.. உடனடியாக அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. அதில், "உங்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் அனுப்பப்பட்டு விட்டது" என்று அந்த மெசேஜ்ஜில் இருந்தது. இதை பார்த்ததுமே வினோத்துக்கு குஷியாகிவிட்டது..

அபேஸ்: உடனே தன்னுடைய பேங்க் அக்கவுண்ட்டில் 5000 ரூபாய் வந்திருக்கிறதா? என்று பார்த்தார்.. ஆனால், தன்னிடமிருந்த ரூ. 4650 பணமும் அபேஸ் செய்யப்பட்டிருந்தது. உடனே இதுகுறித்து புகார் தரவும், அந்த முகநூல் பக்கத்தை ஆதம்பாக்கம் போலீஸார் ஆராய்ந்தனர்.. அப்போதுதான், முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை பதிவிட்டு, மோசடியாக லிங்க்கை அனுப்பி பணத்தை சுருட்டியிருப்பது அம்பலமானது. அந்த மர்மநபர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு உபயோகமாகிறதோ, அதே அளவுக்கு மோசடிகளையும் உருவாக்கிவிடுகிறது.. அதனால்தான் பொதுமக்களுக்கு, நம்முடைய காவல்துறை எந்நேரமும் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+