ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை பணம் கிடைக்காதா?.. அப்செட்டில் பெண்கள்.. ஓ, இதுதான் காரணமா? வெளியான தகவல்
சென்னை: மகளிர் உரிமைத்தொகையின் 2வது தவணைத்தொகை, இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமலாக்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. ஆனால், இந்த திட்டத்தில், சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேல்முறையீடு: எனினும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரும் கூட தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் வரும் 18ம்தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வருகிறார்கள்.. இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில், உரிமைத்தொகைக்காக ஆவலுடன் காத்திருக்கறார்கள்.
எனினும், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பலரும் பலன்பெற்று வருகிறார்கள்..
இன்று கிடைக்குமா?: இந்த மாதம் 15ம் தேதி அதாவது நாளைய தினம், ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், ஒருநாள் முன்கூட்டி இன்றே, அக்டோபர் 14ம்தேதிக்கு பயனாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று இரண்டாவது சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை தினம் என்பதால், இன்று வங்கிக்கணக்கில் வரவு வைப்பது கடினம் என்கிறார்கள்.. அதனால் அக்டோபர் 16-ம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமைதான், பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று பணத்தை எதிர்பார்த்து காத்திருந்த பெண்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
நிதி நெருக்கடி: எனினும், இந்த அக்டோபர் மாதமும் பெண்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இந்த மாதமும், 1065 கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயும் செலவிடப்படுகிறது.. ஏற்கனவே, தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கும்போது, பெரும் முயற்சி எடுத்து செயல்படுத்தி வருகிறது.. இதனால், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. எனினும், இதற்கும் சிக்கல் முளைத்துவிட்டது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் இருக்கும்போது, இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications