கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலினின் ரூ.1000 திட்டம்.. இதோ டெல்லி அதிருது.. மகிளா சம்மன் யோஜனா
சென்னை: டெல்லி அரசின் முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என்ற திட்டத்தில், பெண்களுக்கான 1000 ரூபாய் உதவித்தொகையை எப்படி பெறுவது தெரியுமா?
இந்தியாவின் மகளிரின் நலனுக்காகவும், மகளிரின் வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு எத்தனையோ விதமான அறிவிப்புகளையும் திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது.

அன்னபூர்ணா: இப்படி திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த திட்டங்களில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. உதாரணத்துக்கு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை சொல்லலாம். சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருப்பதாலும், எத்தனையோ பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வழியில்லாமல் இருப்பதாலும், இவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா.
கடனுதவி: இந்த திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்...
இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபிறகு முதல் தவணையை செலுத்த தேவையில்லை. கடனை எளிய தவணை முறையீல் 36 மாதங்கள் அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம்.
புது திட்டம்: இதுபோலவே, பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், டெல்லியிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. அந்த திட்டத்தின் முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டமாகும்.
பெண்கள் பொருளாதாரத்தில் வலுப்பெற்றிருக்கவும், சமூகத்தில் சுதந்திரமாக செயல்படவும் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கு நிதியுதவி அளிப்பது, அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும், நிதி ரீதியாக சுதந்திரம் பெறவும் இந்த திட்டம் கைகொடுக்கக்கூடியது.
பட்ஜெட்: இந்த திட்டம் சமீபத்தில்தான், 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்போது டெல்லி நிதியமைச்சரால் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி, 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பெண்கள், டெல்லியை சேர்ந்தவராகவும், தேசிய தலைநகரின் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.. அதேபோல, உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பெண்கள், அரசு ஊழியராகவோ, வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது.
விண்ணப்பம்: மேலும், விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் விண்ணப்ப பதிவு துவங்கிய பின்பு delhi.gov.in என்ற வெட்சைட்டிற்குள் முழுமையாக விவரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எப்படியும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 45 முதல் 50 லட்சம் பெண்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை போலவே டெல்லியிலும் அம்மாநில முதல்வர் அமல்படுத்தியிருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications