திருநெல்வேலியில் சர்ப்ரைஸ்.. சிவராத்திரிக்கு ரூ.200-ல் சூப்பர் சான்ஸ்.. குஷியில் துள்ளும் தென்காசி
சென்னை: வருகிற 8ம் தேதி மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி, திருநெல்வேலியிலிருந்து ஒரு சர்ப்ரைஸ் செய்தி வந்துள்ளது.. என்ன அது?
மகா சிவராத்திரி என்றாலே, இந்தியா முழுவதுமே இந்த மகா சிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி, வழிபடுவார்கள்... ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது கருதப்படுகிறது.. அதேபோல, அறிவியல் ரீதியாகவும் மகா சிவராத்திரி தினத்தன்று இரவெல்லாம் உறங்காமல், நம்முடைய முதுகெலும்பை நேரே நிமிர்த்தி வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

அறிவியல் + ஆன்மீகம்: அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், வருகிற 8ம்தேதி மகா சிவராத்திரி வருகிறது.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை முன்னிட்டு, பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்றும், பக்தர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்காக, 7, 8 மற்றும் 9 ஆகிய, மூன்று தினங்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்" என்றும் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கை: இந்நிலையில், திருநெல்வேலியிலிருந்து ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் அந்த செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது:
"வரும் மார்ச் 8-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு பஞ்சபூத தலங்கள், திருக்கோயில்களுக்கு சென்று வர பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்க, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்: இந்த சிறப்பு பேருந்துகள் வரும் மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், இரவு 7 மணிக்கு சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்பட்டு தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் சங்கரன்கோவில் - பேருந்து நிலையங்களில் இருந்து இச்சிறப்பு சேவை பேருந்துகளுக்கு 7-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சர்ப்ரைஸ்: இது தொடர்பான விபரங்களுக்கு 94875 99456, 94424 00748, 96008 27070, 80723 66685 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இணையதளம் www.tnstc.in மூலம் முன்பதிவு செய்யலாம். பயணக்கட்டணம் திருநெல்வேலியில் இருந்து ஒரு நபருக்கு ரூ.300, சங்கரன் கோவிலில் இருந்து ரூ.200 ஆகும்.
மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 8-ம் தேதி நவகைலாய திருத்தலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் மாலை 6 மணிக்கு இயக்கப்படும். இதற்கான பயணக் கட்டண தொகை, நபர் ஒன்றுக்கு ரூ.600 ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications