அக்கவுண்ட்டில் ரூ.2000? வங்கியில் 2000 ரூபாய் மாத்திட்டோமே.. ரூ.8,897 கோடி? ரிசர்வ் வங்கி புதுகுண்டு
சென்னை: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் ஒப்படைத்துவிட்ட நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
இந்தியா முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது..

ரிசர்வ் வங்கி: மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிவரை செல்லுபடியாகும் என்பதால், அதற்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இதற்கான காலக்கெடு அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டதால், பொதுமக்களும், 2000 ரூபாயை வங்கிகளுக்கு சென்று மாற்றி கொண்டார்கள். ஆனால், டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உட்பட ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் இந்த வசதி தற்போது கிடைத்து வருகிறது. இங்குள்ள ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலங்களில் வேலை நாட்களில், 2000 ரூபாய் நோட்டுகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
2000 ரூபாய்: கடந்த மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, ரூ3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.. இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி, ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், 2000 ரூபாய் நோட்டுகளில், ரூ.9,760 கோடி மதிப்பிலானவை, இன்னும் வங்கிகளுக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது..
இந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பியிருக்கிறாம். மிச்சம் ரூ.9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை என்றும் முடங்கி கிடக்கும் அந்த பணம் வங்கிகளுக்கு மறுபடியும் திரும்பிவிடும் என்றும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்திருந்தது.
பரபரப்பு: அதன்படியே, கடந்த ஜனவரி 31ம் தேதிக்குள் 97.5 சதவீத ரூ.2000 நோட்டுகள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் வணிக வங்கிகள் டெபாசிட்களில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் இன்னும் மக்கள் மத்தியில் இருப்பதாக மீண்டும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, RBI வங்கி வெளியிட்ட அறிவிப்பில், "8,897 கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் இன்னும் மக்கள் புழக்கத்தில் உள்ளது, கடந்த ஆண்டு மே 19ம் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
வளர்ச்சி: தற்போது பொது மக்களிடம் உள்ள பணம் என்பது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை கழித்த பிறகு புழக்கத்தில் இருக்கும் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பாகும்.
மேலும் 2024 பிப்ரவரி 9ம் தேதி நிலவரப்படி பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வளர்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாக குறைந்துள்ளது. கையிருப்பு பணத்தின் வளர்ச்சி 11.02 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக குறைந்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறது.
மொத்தத்தில், 8,897 கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் இன்னும் மக்கள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது. ஒருவேளை அவை கருப்பு பணமாக நிழலுக நபர்களிடம் பதுங்கியிருக்கலாம் அல்லது முறைகேடான காரணத்தில் வெளியே புழக்கத்தில் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அந்த பணம் விரைவில் வங்கிக்கு வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications