50 ரூபாய் சேமிப்பு.. ரூ.35 லட்சம் ரிட்டன்.. போஸ்ட் ஆபீஸின் கிராம் சுரக்‌ஷா யோஜனா.. அட்டகாசமான திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை தினமும் ரூ.50 முதலீடு செய்தாலே, முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா? இந்த திட்டத்தில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த சேமிப்பு திட்டமானது, குறுகிய தொகையில் அதிக லாபத்தை தரக்கூடியது. இதில், தினந்தோறும் ரூ.50 அதாவது மாதம் 1500 ரூபாய் வரை முதலீடு செய்து வரும்போது, முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

gram suraksha yojana scheme post office savings

பிரீமியம்: 19 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும், இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக ரூ.10,000, அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் இத்திட்டம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.. மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பிரீமியத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

அதேபோல, ஒருவர் மாத மாதமும் ரூ.1,500 கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். தினம் ரூ.50 என்ற விதத்தில் முதலீடு செய்தாலும், முதிர்வு காலத்தில் இத்திட்டத்தின் வாயிலாக ரூ.35 லட்சம் வரை திரும்பப் பெறலாம்.

விதிமுறைகள்:இதன் பிரீமியமாக 55 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,515 ரூபாயும், 58 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,463 மற்றும் 60 ஆண்டுகளுக்கு 1,411 ரூபாயும் ஒருவர் செலுத்த வேண்டும்

ரூ.35 லட்சம், 80 வயதை நிறைவு செய்யும்போது, தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். இருந்தாலும், பலரும் இந்த தொகையை முன்கூட்டியே கோருவதால், விதிகளின்படி 55 வருட முதலீட்டில் ரூ.31 லட்சத்து 60 ஆயிரமும், 58 வருட முதலீட்டில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரமும், 60 வருட முதிர்வு காலத்தில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரமும் லாபம் கிடைக்கும்.

கிராமப்புற மக்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த திட்டம் அஞ்சல் அலுவலகத்தின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

பாலிசி: காப்பீட்டாளரின் 59 வயது வரை எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றலாம், பிரீமியம் செலுத்துதல் நிறுத்தப்பட்ட தேதி அல்லது முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாற்றும் தேதி வராது. எனவே, பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 ஆக தேர்வு செய்யலாம்.

கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு தேவையான கடன் வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன் வசதி கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் அதைச் சரண்டர் செய்ய விரும்பினால், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 3 வருடத்துக்கு பிறகு சரண்டர் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் திட்டத்தில் போனஸும் கிடைக்கும்.

சிறப்புகள்: மொத்தத்தில், கிராமங்களில் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சல் துறை உருவாக்கியிருக்கிறது. ஆபத்து இல்லாத திட்டமாக தபால் துறையால் உருவாக்கப்பட்டிருப்பதால்தான், கிராம சுரக்ஷா யோஜனா திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களிலேயே மிகவும் பிரபலமானதாக திட்டமாக உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+