ஒரே மாநிலம்.. “இரட்டை ஆபரேசன்!” ஆடியோ லீக்.. “புரோக்கர்”- ஆர்எஸ்எஸ், பாஜகவை சாடிய தமிழ்நாடு எம்பி
சென்னை: தெலுங்கானா எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை ரூ.100 கோடிக்கு வாங்க பாஜக தேதி பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயன்று வருவதாகவும், ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகத்தை படுகொலை செய்வதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 5 பேரிடம் பாஜக குதிரை பேரம் பேசியதாக ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானாவில் கடந்த சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்தே சந்திரசேகர் ராவ்தான் முதலமைச்சராக உள்ளார்.

ஆபரேசன் சவுத்
இங்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக பங்காற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே கடந்த சில மாதங்களுக்கு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக கூட்டியது. அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியாவை அறிவித்தார்.

தென்னிந்திய மாநிலங்கள்
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என அவர் முழங்கினார். அதன் தொடர்ச்சியாக அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று வருகின்றனர்.

ராகுல் காந்தி
மறுபக்கம் ஆந்திராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தெலுங்கானாவில் மீண்டும் கையை உயர்த்த வேண்டும் என்று வியூகங்களை வகுத்து வருகிறது. கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

சந்திரசேகர் ராவ்
இதற்கு மத்தியில்தான் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்க அவர் முயன்று வருகிறார்.

தேசிய கட்சி
இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் பல மாநிலங்களில் உள்ள முன்னோடி அரசியல் தலைவர்களை அழைத்து தேசிய கட்சியை உருவாக்கினார். இந்த நிலையில்தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை வாங்க பாஜக பேரம் பேசிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குதிரை பேரம்
இதுதொடர்பாக வெளியான ஆடியோ அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏக்களான ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகியோருக்கு தலா ரூ.50 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இது தொடர்பாக எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலக விரும்பினால், பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஐதராபாத்துக்கு வருகை தருவார். ஆர்.எஸ்.எஸ். கொள்கையின்படி அனைத்தும் நடைபெறும் என்று பாஜகவை சேர்ந்தவர் பேசும் ஆடியோவை வெளியானது.

மாணிக்கம் தாக்கூர்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், "ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் மூலம் ஜனநாயகத்தை கொல்ல நினைக்கிறது. தெலுங்கானாவில் மற்றொரு உதாரணமாக பாஜகவை தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், ரூ.100 கோடிக்கு பாஜக எம்.எல்.ஏவை வாங்க புரோக்கராகி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் புரோக்கர்களை நினைத்து வெட்கமாக உள்ளது. தெலுங்கானா அவர்களை தண்டிக்குமா?" என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications