சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானதி + முருகன் + அண்ணாமலை.. சேர்ந்து வந்த தலைகள்.. ஆர்எஸ்எஸ் கூட்டம்.. தடை போட்ட ஸ்டாலின்.. அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று காலை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது என பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். அரசு பள்ளியில் இதுபோன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு! தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு!

உத்தரவு

உத்தரவு

இதையடுத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில், கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் கூட்டத்தை நடத்த கூடாது. இது சட்டப்படி தவறு. மீறி அனுமதி செய்தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.கோவையில் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், "பள்ளியை சுத்தம் செய்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு, முன்னறிவிப்பின்றி, பயிற்சி நடத்தியிருக்கின்றனர்" என்று விளக்கமளித்தார். அதோடு கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சென்னை

சென்னை

இந்த நிலையில்தான் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் இந்த கூட்டம் நடப்பதாக இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பாஜகவின் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொள்வதாக இருந்தது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இதில் கலந்து கொள்ள இருந்தார். அதேபோல் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தார். அதேபோல் அண்ணாமலையும் இதில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

 பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள்

பாஜகவின் 3 முக்கியமான தலைவர்கள் இவர்கள். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. அந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடையில் இப்படி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் இவர்கள் ஒன்றாக கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது பெரிதும் கவனிக்கப்பட்டது. இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான் கல்வி நிறுவனங்களில் அரசியல் கூட்டங்களை நடந்த அனுமதி இல்லை . அதேபோல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது . இதற்கான விதி ஏற்கனவே உள்ளது. அதனால் இந்த இல்லை, என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முன்னதாக தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.விசிக இதே நாளில் மனித சங்கிலி நடத்துவதாக இருந்தது. இதற்கு போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், 44 இடங்களில்

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவிலில் நாங்குநேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மூடிய இடத்தில் பேரணி நடத்த சொன்னதாலும், பேரணியில் கலந்து கொள்ளும் நபர்களின் ஐடி கார்டுகளை போலீசிடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாலும் இந்த கூட்டம் கைவிடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
RSS meeting in Chennai school banned which Annmalai, Vanathi, L Murugan are supposed participants .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X