Judge Mohana: உச்சநீதிமன்ற நீதிபதியானார்! தமிழகத்தின் முதல் பெண் மோகனா! விஜய் வாழ்த்து
சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் என்ற பெருமையை பெற்ற வெங்கிட சுப்பிரமணி மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப்பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.
மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் மோகனாவுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
#CMJosephVijay என தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கொலிஜியம் கூட்டத்தில் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பாலி மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி மோகனா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வி மோகனா, தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார்.
வி மோகனா நீதிபதியாக பொறுப்பேற்கும்பட்சத்தில் தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2 வது நீதிபதி, தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெறுவார். மோகனா தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கே விஸ்வநாதனுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர்.
கோவையை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் வி. மோகனா, சட்டத் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். கோவை அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 1988-ம் ஆண்டு சட்டம் பயின்றார். நம் நாட்டின் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் சட்டம் பயின்றார்.
உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய மற்றும் சிக்கலான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். கபில் சிபல், கே.கே. வேணுகோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டுள்ளார் மோகனா.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட இவருடைய பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications