பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பாஜகவில் இருந்து விலகுவதற்கான அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: எனது அருமை சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் இருக்க கடவுள் அருள வேண்டும்.

annamalai

புதிய கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை இதுவரை யாரிடமும் பேசவில்லை. நாங்களும் இது குறித்து அவரிடம் பேசவில்லை. அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் எனக்கு வரவில்லை. ண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக எனக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றார்.

"காங்கிரஸின் பினாமி கட்சிதான் த.வெ.க!" - அண்ணாமலை விலகல் சர்ச்சை, ஊழல் புகார்களை உடைத்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!

தமிழக அரசியலில் அண்ணாமலையின் கட்சி விலகல் வதந்திகள், த.வெ.க அரசின் 23 நாள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் மின்சார வாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்து பதிலளித்துள்ளார்.

அவரது பேட்டியின் முக்கிய அரசியல் அதிரடிகள் இதோ:

1. "அண்ணாமலை பா.ஜ.க-விலிருந்து விலகுகிறாரா?" - நயினார் நாகேந்திரன் முற்றுப்புள்ளி!

பா.ஜ.க.விலிருந்து அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் பரவி வரும் தகவல்களுக்கு நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார்.

பிறந்தநாள் வாழ்த்து: "எனது அருமை சகோதரர் அண்ணாமலை ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்ட ஆயுள் வாழ இறைவனைப் பிரார்த்தித்து என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

ராஜினாமா கடிதம் வரவில்லை: "பா.ஜ.க மாநிலத் தலைவர் என்ற முறையில் அண்ணாமலையிடமிருந்து எனக்கு எந்தவொரு ராஜினாமா கடிதமும் வரவில்லை; இது குறித்து அவர் என்னிடம் பேசவும் இல்லை. சிறு விஷயத்தைப் பெரிதாக்குவது ஊடகங்கள்தான். தேர்தல் நேரத்தில் அவர் தனி ஹெலிகாப்டரில் சென்று எங்களுக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்தார். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை."

இரண்டு நாள் கெடு?: 'இரண்டு நாட்களில் பேசுவதாக அண்ணாமலை கூறியிருந்தாரே?' என்ற கேள்விக்கு, "அப்படியென்றால், அது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" எனத் தெளிவாகப் பதிலளித்தார்.

2. "த.வெ.க என்பது காங்கிரஸின் மறுபிம்பம்!" - அதிரடி அட்டாக்!

சமீபத்தில் த.வெ.க தனக்குக் கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha) வாய்ப்பைக் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது குறித்து நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

"தமிழக வெற்றி கழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் ஒரு பினாமி கட்சி போலத்தான் செயல்படுகிறது. த.வெ.க அரசின் பதவியேற்பு விழாவிலும், அமைச்சர்களின் குழு புகைப்படத்தின்போதும் ராகுல் காந்தி உடனிருந்தார். இதிலிருந்தே த.வெ.க என்பது காங்கிரஸின் மறுபிம்பம் என்பது தெளிவாகத் தெரிகிறது."

3. "தி.மு.க-விற்கும் த.வெ.க-விற்கும் வித்தியாசமே இல்லை!" - 23 நாள் ஆட்சிக் குற்றச்சாட்டு!
முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க அரசு பதவியேற்று 23 நாட்களுக்கு மேலாகியும், முந்தைய தி.மு.க அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

சிறுபான்மை அரசா?: "சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால் தங்களது அரசை 'சிறுபான்மை அரசு' என விஜய் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வது 'சிறுபான்மை அரசா' அல்லது 'சிறுபான்மையினர் நல அரசா' என்பதை அவர்தான் விளக்க வேண்டும்."

சட்டம் ஒழுங்கு சீர்கேடு: மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா விற்பனை மற்றும் 15-க்கும் மேற்பட்ட படுகொலைகள் தற்போதும் தடையின்றித் தொடர்வதாகச் சாடினார்.

டாஸ்மாக் மாமூல்: "தேர்தலுக்கு முன்பு 'டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்' என விஜய் பாடினார். ஆனால் இன்று டாஸ்மாக் கடைகளில் மாமூல் வசூல் நிற்கவில்லை. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கலாம் என உயர் நீதிமன்றமே கூறியதாக தற்போதைய அமைச்சரே பேசும் அவலம் தொடர்கிறது."

4. மின்வாரியத்தில் ₹400 கோடி ஊழல்? - ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய 'ஹார்ட் டிஸ்க்' காணாமல் போன விவகாரத்தை நயினார் நாகேந்திரன் கையில் எடுத்துள்ளார்.

"மின்சார வாரிய டெண்டர்களில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க ஆட்சி முடிந்து, தற்போது த.வெ.க ஆட்சியில் இப்படி முக்கிய ஆதாரங்கள் காணாமல் போனால் இதற்கு யார் பொறுப்பேற்பது?" என்று கேள்வி எழுப்பினார்.

5. "மத்திய அமைச்சர் பதவி?" - டெல்லி பயணம் குறித்து விளக்கம்!

தான் மத்திய அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் கேட்டபோது:
"நான் டெல்லி சென்று கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரைச் சந்தித்தது உண்மைதான். ஆனால், என்னிடம் இதுபற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. ஊடகங்கள்தான் இந்தச் செய்திகளை உருவாக்கி வருகின்றன" என்று கூறி நயினார் நாகேந்திரன் விடைபெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+