உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. வங்கி உறுப்பினர்களின் ஆலோசனையின் முடிவில் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்படுமா என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக வீட்டு கடன் மற்றும் வாகன கடன் வாங்கியவர்கள் இதற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்த அவர் வரவிருக்கும் கொள்கை முடிவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது சாமானிய மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

RBI Interest Rate Decision Gita Gopinath Predicts Pause Amid Oil Price Surge

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தற்போதைய நிலையிலேயே (Status Quo) தொடர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கீதா கோபிநாத் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாகத் தெரிகிறது. இதனால் நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

"இந்திய ரிசர்வ் வங்கி வரவிருக்கும் வெள்ளிக்கிழமை கொள்கை முடிவில் வட்டி விகிதங்களை மாற்றாமல் அப்படியே (On hold) வைப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்குப் பிறகு, எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் பணவீக்கம் குறித்த தரவுகளைப் பொறுத்தே (Data-dependent) அமையும்.

தற்போது ரிசர்வ் வங்கியானது, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்படக்கூடிய பணவீக்க அபாயங்களுக்கும், பொருளாதார நடவடிக்கைகளில் தென்படும் மந்தநிலைக்கான அறிகுறிகளுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க முயன்று வருகிறது. எனவே, தற்போதைக்கு ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாமல் காத்திருக்கும் என்றும், அதன் பிறகு பணவீக்கத்தின் போக்கைப் பார்த்துவிட்டு அதற்கேற்ப எதிர்வினை ஆற்றும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் இந்த அணுகுமுறையே மிகவும் பொருத்தமானதாகும்.

ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் பரந்த மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் பதற்றங்களால் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும், இந்திய ரூபாய் மதிப்பை ரிசர்வ் வங்கி கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் இத்தகைய பெரிய மாற்றங்கள் ஏற்படும் போது, அதற்கு ஏற்ப நாணயத்தின் மதிப்பில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இந்தச் சூழலை ரிசர்வ் வங்கி மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. சர்வதேசச் சூழலுக்கு ஏற்ப ரூபாய் மதிப்பு மாறுவதற்கு அவர்கள் அனுமதித்துள்ளனர், அதுதான் சரியானதும் கூட.

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் நிகழ்வுகள் பொருளாதார ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக ரூபாய் மதிப்பில் சில வீழ்ச்சிகள் ஏற்படுவதை நாம் எதிர்பார்க்கத் தான் வேண்டும். அதே நேரத்தில், சந்தையில் நிலவும் ஒழுங்கற்ற சூழலைச் சரிசெய்வதற்காக ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டுச் செயல்படுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், இத்தகைய தலையீடுகள் சந்தையின் செயல்பாட்டை முறைப்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ரூபாய் மதிப்பில் எந்தவொரு அசைவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இருக்கக் கூடாது.

நாணய மதிப்பில் எந்தவொரு மாற்றமும் நடக்காமல் தடுக்கும் வகையில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மத்திய வங்கியின் தலையீடு நின்றவுடன் ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடையும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதினால், அவர்கள் நாட்டுக்குள் மூலதனத்தைக் கொண்டு வரத் தயங்குவார்கள். எனவே, நாணய மதிப்பு அதன் தகுந்த நிலையை அடைய அனுமதித்து, சந்தையில் ஏற்படும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை சீரமைக்க மட்டும் தலையிடுவதே சரியான அணுகுமுறை. அந்த வகையில், தற்போது இது கையாளப்படும் விதம் மிகவும் பொருத்தமாக உள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் சில பணவீக்க அழுத்தங்கள் இருந்தாலும், நுகர்வோர் விலை பணவீக்கம் இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. ஏனெனில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த அளவுக்கு, சில்லறை எரிபொருள் விலையில் அதன் தாக்கம் இன்னும் முழுமையாகக் கடத்தப்படவில்லை; அங்கு ஓரளவுக்கு உயர்வு இருந்தாலும், அது மிக அதிகமாக இல்லை.

அதே நேரத்தில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளிலும் சில மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பணவியல் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது இதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு முன்பாக, பணவீக்கத்திற்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் என்ன நடக்கிறது என்பதை இன்னும் சில தரவுகள் மூலம் பொறுத்திருந்து பார்ப்பது ஒரு நல்ல அணுகுமுறையாக இருக்கும்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+