சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial june 4th episode) மீண்டும் ஒருமுறை முத்துவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை கைதட்ட வைத்துள்ளது. ஏல மேடையில் அண்ணாமலையின் வீடு கைவிடப்படும் சூழ்நிலையில், கடைசி நிமிடத்தில் முத்து செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. இன்றைய ஜூன் நான்காம் தேதிக்கான எபிசோட் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

விஜயாவின் வீட்டை ஏலத்தில் எடுத்து பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் இருந்த சிந்தாமணி, அதற்கான அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே செய்து வைத்திருந்தார். முத்து பணத்தை ஏற்பாடு செய்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும், அந்த பணம் ஏல இடத்துக்கு போகாமல் தடுக்க திட்டம் தீட்டினார். இதற்காக தனது ஆட்களை அனுப்பி, மீனாவிடம் இருந்த பணப்பையை வழியிலேயே பறிக்க ஏற்பாடு செய்தார்.

மீனா பணத்துடன் ஏலம் விடும் இடத்திற்கு போய்க் கொண்டிருக்கும்போது, சிந்தாமணி அனுப்பிய ரெளடிகள் அவரது பையை பறித்துச் செல்கின்றனர். இதனால் அண்ணாமலை குடும்பத்தின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. வீட்டை காப்பாற்ற முடியாதோ என்ற கவலை அனைவரின் முகத்திலும் தெரிந்தது.

ஆனால் மறுபுறம் முத்து வேறு ஒரு போராட்டத்தில் இருந்தார். பைனான்சியரிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக காத்திருந்த அவருக்கு, பணம் கொண்டு வந்த நபர் போலீசில் சிக்கியதாக தகவல் கிடைக்கிறது. உடனடியாக தானே சென்று பணத்தை வாங்க முடிவு செய்கிறார். நேரடியாக சென்று பணத்தை வாங்கிய முத்து ஏலம் நடக்கும் இடத்திற்கு கிளம்புகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்துவுக்கு வந்த அடுத்த சோதனை

எல்லாம் சரியாக நடக்கிறது என நினைத்த நேரத்தில், முத்துவின் பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது. நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் முத்துவுக்கு, அப்போது ஒரு நபர் சைக்கிளில் பெட்ரோல் எடுத்துச் செல்வது கண்களில் படுகிறது.

தனது அவசர நிலையை எடுத்துச் சொல்லி அவரிடம் இருந்து பெட்ரோலை வாங்கும் முத்து, மீண்டும் பயணத்தை தொடர்கிறார். இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு பரபரப்பான சஸ்பென்ஸ் அனுபவத்தை கொடுத்தன.

திக் திக் நொடிகள்

ஏல மையத்தில் சிந்தாமணி 58 லட்சம் வரை ஏலம் பேசி வீட்டை கைப்பற்ற தயாராக இருந்தார். அதிகாரிகள் இறுதி அறிவிப்பை வெளியிடும் தருணம் வந்தது.

"ஒரு தரம்... இரண்டு தரம்... மூன்று தரம்..." என்று சொல்லும் அந்த பரபரப்பான நொடியில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் முத்து ஏலம் விடும் இடத்திற்குள்நுழைகிறார்.

கையில் இருந்த பணத்தை மேசையில் கொட்டி, "இந்த வீட்டை ஏலத்தில் விட வேண்டாம். இவர்களுக்குத் தேவையான முழு பணமும் இதில் இருக்கிறது" என தைரியமாக கூறுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

சிந்தாமணிக்கு சர்ப்ரைஸ்

முதலில் எண்ணியபோது 28 லட்சம் மட்டுமே இருந்தது. இதைப் பார்த்த சிந்தாமணி, "மொத்தம் 38 லட்சம் கட்ட வேண்டியிருக்கே... என்ன ஏமாற்றப் பார்க்கிறீங்களா?" என்று கேலி செய்கிறார்.

ஆனால் அடுத்த நொடியே அண்ணாமலையின் கையில் இருந்த மற்றொரு பையில் இருந்து 10 லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் முத்து. முழுத் தொகையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும், சிந்தாமணியின் முகம் வாடிப்போய்விடுகிறது.

திருடப்பட்ட பணம்

இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், மீனாவிடம் இருந்து திருடப்பட்ட பணத்தையும் முத்து மீட்டுவிட்டார். "நம்ம திருடுன பணம் இங்க எப்படி வந்துச்சுனு யோசிக்கிறியா?" என்று சிந்தாமணியிடம் கேட்கும் முத்து, நடந்த அனைத்தையும் விளக்குகிறார். இதனால் சிந்தாமணி போட்ட திட்டம் முழுவதுமாக தகர்ந்து போகிறது.

குடும்பம் காப்பாற்றப்பட்டது

கடைசியாக சிந்தாமணி, "நான் ஏலத்தில் வீட்டை எடுத்துவிட்டேன். இனிமேல் இந்த வீடு இவர்களுக்குச் சொந்தம் கிடையாது" என்று வாதிடுகிறார். ஆனால் அதிகாரிகள், பணத்தை கட்டுவதற்கான அவகாசம் இன்னும் இருந்ததால், வீடு அண்ணாமலை குடும்பத்திற்கே சொந்தம் என தெளிவாக அறிவிக்கின்றனர்.

இதனால் அண்ணாமலை குடும்பம் முழுவதும் நிம்மதி பெருமூச்சு விடுகிறது. வீட்டை மீட்ட மகிழ்ச்சியில் அனைவரும் கண்கலங்க, சிந்தாமணி மட்டும் தோல்வியுடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

நீண்ட நாட்களாக சிந்தாமணியின் சூழ்ச்சிகளால் அவதிப்பட்டு வந்த அண்ணாமலை குடும்பத்திற்கு இந்த எபிசோடு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. குறிப்பாக கடைசி நிமிடத்தில் முத்து செய்த ஹீரோயிசம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. "சிறகடிக்க ஆசை" ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முத்துவை பாராட்டி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+