சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், அம்மாநில முன்னணி நாளிதழ் வெளியிட்ட அட்டைப்படம் ஒன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவரை இந்து மதக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தில் சித்தரித்து வெளியான அந்த கார்ட்டூன் சித்திரம், மாநிலம் முழுவதும் கடுமையான மத மற்றும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்து அமைப்புகளும் பொதுமக்களும் இதற்கு எதிராகக் கொந்தளித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் என்ன நடந்தது?

கர்நாடகாவில் ஒருவழியாக முதல்வர் நாற்காலி பஞ்சாயத்து முடிந்து, டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். ஆனால், அவர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அம்மாநிலத்தில் ஒரு புதிய வெடிகுண்டு வெடித்திருக்கிறது. அதுதான் "விஸ்வவாணி" செய்தித்தாளின் அட்டைப்பட சர்ச்சை!

DK Shivakumar

கன்னட நாளிதழான "விஸ்வவாணி"

கன்னட நாளிதழான "விஸ்வவாணி" ஜூன் 3ம் தேதி வெளியிட்ட தனது முதல் பக்க கார்ட்டூன் விளம்பரம் ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அதிர வைத்துள்ளது.

புதிய முதல்வர் டி.கே. சிவகுமாரை, அப்படியே சிவபெருமான் தோற்றத்தில் சித்தரித்து அந்தப் படம் போடப்பட்டிருந்தது. தலையில் சடாமுடி, புலித்தோல் ஆடை, கையில் திரிசூலம், உடுக்கை என அச்சு அசலாக கடவுள் சிவன் போலவே சிவகுமாரை வரைந்திருந்தார்கள். அதற்கு "அரசியல்வாதிகளின் மத்தியில் ஒரு ருத்ரன்" என்றும் தலைப்பு வைத்திருந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல்களை சிவகுமார் சமாளித்ததை இப்படிப் பாராட்டியிருந்தார் அந்த நாளிதழின் தலைமை ஆசிரியர் விஸ்வேஷ்வர் பட்.

விஷயம் இதோடு நிற்கவில்லை.. இந்த அட்டைப்படத்தைப் பார்த்ததும் இந்து அமைப்புகளும், பொதுமக்களும் செம கடுப்பாகிவிட்டனர். "அரசியல் ஆதாயத்துக்காகவும், ஐஸ் வைப்பதற்காகவும் ஒரு மனுஷனைப் போய் கடவுளோடு ஒப்பிடுவதா? இது சுத்தமான தெய்வ நிந்தனை" என்று சமூக வலைதளங்களில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர்.

புதிய முதல்வர் டி.கே. சிவகுமார்

வழக்கறிஞர் கிரீஷ் பரத்வாஜ் என்பவர், "இது தர்மத்திற்கு எதிரானது. அரசியல் காரணங்களுக்காக நம் கடவுள்களின் புனிதத்தைக் குறைக்கக் கூடாது" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.

இன்னும் சில பேராசிரியர்களோ ஒருபடி மேலே போய், "கடந்த 2019-ல் பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஒருவரை, எப்படி சிவபெருமானோடு ஒப்பிடலாம்? துதிபாடுவதற்கும் ஒரு எல்லை இல்லையா?" என்று பழைய சிறை விவகாரத்தைத் தோண்டித் துருவி சிவகுமாரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

சிவகுமாருக்கு வந்த தலைவலி

ஒருபுறம், நீண்ட இழுபறிக்குப் பிறகு சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய, லோக் பவன் கண்ணாடி மாளிகையில் டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராக கெத்தாகப் பதவியேற்றார். அவருடன் சித்தராமையாவின் மகன் யதீந்திரா உட்பட 13 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்ற அதிரடி அறிவிப்புகளையும் சிவகுமார் வெளியிட்டார். பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்.

ஆனால் என்ன செய்ய? முதல்வர் பதவியேற்ற அதே நாளில், இந்த "சிவன் கெட்டப்" கார்ட்டூன் படம் வெளியாகி, சிவகுமாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுக்குப் பெரிய கரும்புள்ளியாக மாறிவருகிறது.. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தாலும், நாளிதழ் ஆசிரியரோ அல்லது டி.கே.சிவகுமார் தரப்போ இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவதுதான் அங்கு தற்போதைய ஹாட் டாபிக்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+