தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. 8ம் வகுப்பு வரை மிகப்பெரிய வரப்பிரசாதம்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 22-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரும், இலவச கட்டாயகல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடர்பு அதிகாரியுமான எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

"இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதில், வரும் கல்வி ஆண்டுக்கான (2024-25) மாணவர் சேர்க்கை பணிகளை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 25 சதவீத இடங்கள் கணக்கிடப்பட்டு அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் எமிஸ் தளத்தில் ஏப்ரல் 10-ம்தேதி வெளியிடப்படும். www.tnemis.tnschools.gov.in இணையதளத்திலும் அன்றைய தினமே பள்ளிகள் வாரியாக இடங்களின் எண்ணிக்கை வெளியிடப்படும். பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளியின் தகவல் பலகையிலும் இந்த விவரங்களை வெளியிட வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மைய அலுவலகங்களில் செய்ய வேண்டும்.
எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021 தேதிக்குள்ளும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்ப பரிசீலனையை மே 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை நடத்த வேண்டும்.
சேர்க்கைக்கு தேர்வானோர், காத்திருப்போர் விவரம் ஆகியவற்றை மே 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சேர்க்கைக்கு தேர்வான குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் அனுப்பப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தமிழ்நாடு அரசிற்கு நேற்று அனுப்பி உள்ள கடிதத்தில் , "அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் (RTE) மாணவர்களை சேர்த்ததில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண பாக்கி இதுவரை வழங்கவில்லை.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கி 386 கோடி ரூபாய் வழங்குவதாக அரசாணை வெளியிட்டும் இதுவரை வழங்கவில்லை. கல்வியாண்டின் கடைசி நாட்கள் வந்த பின்னும், இதுவரை கல்வி கட்டண பாக்கி தராததால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் தர முடியாமல் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
பள்ளிகளின் வங்கிக் கணக்கு எண் மாறவில்லை. வங்கி மாறவில்லை, ஐஎஸ்எப்சி கோடு மாறவில்லை. பல ஆண்டுகளாக தரக்கூடிய அதே வங்கிக் கணக்கு எண்ணில் பணத்தை கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? எனவே, அரசு மற்றும் அதிகாரிகள் மிகவும் கவனக்குறைவாக தனியார் பள்ளிகளை மிகவும் மரியாதைக்குறைவாக நடத்துவதாக கருதுகிறோம்.
தனியார் பள்ளிகளுக்கு உரிய கல்விக் கட்டண பாக்கியை உடனடியாக தர வேண்டும். இல்லையென்றால், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் புறக்கணிப்பது என்றும், தனியார் பள்ளிகளுக்குரிய கல்வி கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான 2024-2025 இலவச கட்டாய கல்விச் சட்டத்தில் (RTE-25) மாணவர்களை சேர்க்காமல் அனைவரும் புறக்கணிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications